tamilnadu

நல்ல மகசூலை பெற தரமான விதைகளை பயன்படுத்துவீர்

தருமபுரி, ஜன. 16- நிலக்கடலை, ராகி சாகுபடியின்போது தரமான விதைகளை பயன்படுத்தி நல்ல மகசூலை பெற தருமபுரி விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தருமபுரி விதைப்பரிசோதனை அலு வலர் டி.ரவி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தருமபுரி மாவட்டத்தில் பெய்துள்ள பருவ மழைக்கு தற்போது பரவலாக நிலக் கடலை, ராகி, நெல் மற்றும் கொண்டை கடலை விதைப்பு  நடைபெற்று வருகிறது.  அறுவடையின்போது நல்ல விளைச்சலை பெற்றிட தரமான நல்ல விதைகளை விவ சாயிகள் பயன்படுத்த வேண்டும். விதையின் தேர்வு மட்டுமே விளைச்சலை நிர்ணயிக்கும். குறிப்பாக நிலக்கடலையில், குறித்த ஈரப்பதம் இருந்தால் மட்டுமே விதை வேரூன்றி வளர இயலும், இல்லை யெனில் முளைக்கும் விதை போதுமான வலுவின்றி மேலும் வேரூன்றி முளைத்து தழைக்க இயலாமல் மடிந்து வரும்.  இந்நிலையில் வயலில் பயிரின் எண் ணிக்கையை சமன் செய்ய இயலாது. சீரான  பயிர் எண்ணிக்கையை பராமரித்தால் மட்டுமே நல்ல மகசூல் கிடைக்கும். அவ் வாறு பராமரித்திட விதையின் தரத்தினை அறிந்து பயிரிட வேண்டும். எனவே விதைகளை வேளாண்மை விரிவாக்க மையம் மற்றும் உரிமம் பெற்ற விதை விற்பளை நிலையங்கிளில் இருந்து மட்டும் தரமான விதைகளை வாங்கி பயன் அடையவும். அவ்வாறு வாங்கப்படும் விதை களுக்கு கட்டாயம் உரிய ரசீதினை கேட்டுப்  பெற்று கொள்ளவும். விதை விபர அட்டையில் குறிப்பிட்டுள்ள விவரங்களை சரிப்பார்த்து விதைகளை வாங்க வேண்டும்.  விதை விபர அட்டையில் காணப்படும் பியிரிட உகந்த பருவம் மற்றும் பயிரிட உகந்த மாநிலம் ஆகிய விவரங்களை சரி பார்க்க வேண்டும். மேலும் விதைகளை வாங்கும் முன்னர் அந்த விதைக் குவியலுக் குரிய முளைப்புத்திறன் பகுப்பாய்வு அறிக் கையினை கேட்டு சரி பாரக்க வேண்டும்.  மேலும், விதையின் தரத்தினை அறிந்திட விவசாயிகள் தங்களிடம் உள்ள விதைகள் (அ) விற்பனையாளரிடம் இருந்து பெறப்பட்ட விதையினை விதைப்பிற்கு முன்  200 எண்ணிற்கு குறையாமல் விதை களை எடுத்து  மாவட்ட ஆட்சியர் அலுவ லகம் பின்புறம் செயல்படும் விதை பரி சோதனை நிலையத்தில் கொடுத்து, ஆய்வு கட்டணமாக ரூ.30- செலுத்தி, விதையின் தரமறிந்து சாகுபடி செய்திடுவீர் என தெரி வித்துள்ளார். 

;