tamilnadu

img

கூட்டமாக திரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா

தருமபுரி, மார்ச் 29- தருமபுரி நகராட்சியில் வெறிநாய்களின் தொல்லையால் அச்சத்தில் உள்ள பொதுமக்கள், நாய்களை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர். தருமபுரி நகரில் தற்போது நாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நாய்கள் கூட்டம் கூட்டமாக பி.ஆர்.சுந்தரம் தெரு, முஹம்மது அலி கிளப் ரோடு, ஆறுமுகம் ஆசாரி தெரு, பென்னாகரம் மெயின் ரோடு, நகர் மற்றும் புறநகர் பேருந்து நிலையங்களில் சுற்றுகின்றன. காலை மற்றும் இரவு நேரங்களில் தனியாக நடந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் இரு சக்கரவாகனங்களில் செல்லக் கூடிய சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தெருநாய்கள் துரத்தி செல்கின்றன. சில சமயங்களில் கடித்து விடுகின்றன. சில வெறிநாய்கள் இருசக்கரவாகனம் செல்லும் போது குறுக்கே சென்று இருசக்கர வாகனத்தில் செல்வோரை விபத்துக்குள்ளாக்குகின்றன. எனவே நாய்களின் தொல்லையால் நகர மக்கள் பொரும் அச்சத்தில் உள்ளனர்.மேலும், தெருநாய்கள் நகராட்சி குப்பைவண்டி பின்னே கூட்டமாக சுற்றுகின்றன. அந்த குப்பை வண்டியில் வரக்கூடியகழிவுகள் மற்றும் அழுகிய இறைச்சி போன்றவற்றை நாய்கள் உண்கின்றன. அத்தகைய நாய்கள் பொதுமக்களை கடித்தால் தொற்று நோய் பரவி பெரியபாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே இவற்றைத் தடுக்க நகராட்சி நிர்வாகம் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

;