tamilnadu

img

சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிய ஊராட்சி ஒன்றிய அலுவலர் குடியிருப்பு

தருமபுரி, ஆக.18- தருமபுரியில் பாழடைந்துள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் குடியிருப்பை இடித்து விட்டு, புதிய குடியிருப்புகள் கட்ட  வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  தருமபுரி நான்கு ரோடு அருகே, தரும புரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு சொந்தமான 10க்கும் மேற்பட்ட ஊழியர்கள் குடியிருப்பு உள்ளது. இக்குடியிருப்புகள் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப் பட்டன. மேலும், ஓட்டு வீடுகளாக இருப்ப தாலும், பாதுகாப்பு  குறைபாடு காரணங் களால் தருமபுரி ஊராட்சி ஒன்றிய அலுவல கத்தில் பணியாற்றும் ஊழியர்கள், சேதம்  அடைந்த பழைய வீடுகளில் குடியிருக்க விரும்பவில்லை. இதனால் கடந்த 15  வருடங்களுக்கும் மேலாக இந்த குடியி ருப்புகள் மேலும் சேதம் அடைந்து வருகிறது.  இந்நிலையில், குடியிருப்புக்குள் சமூக விரோதிகள் மற்றும் குடிமகன்களின் கூடாரமாக மாறி வருகிறது. இது குறித்து புகார் எழுந்தது.  இந்நிலையில் தருமபுரி வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள் சேதம டைந்த குடியிருப்புகளை சில மாதங்களுக்கு முன்பு பார்வையிட்டனர். இதன் பின்னர் வழக்கம் போல், இந்த குடியிருப்புகளை சீர மைக்கப்படவில்லை. எனவே நகரின் முக்கிய  பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய  அலுவலர் குடியிருப்புகளை இடித்து விட்டு,  அதே இடத்தில் அரசு ஊழியர்கள் குடியி ருப்புகளோ அல்லது அரசு அலுவலகமோ கட்டுமாறு சமூக ஆர்வலர்கள் மாவட்ட  நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள் ளனர்.

;