tamilnadu

தருமபுரி முக்கிய செய்திகள்

ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் அனைத்து பகுதிகளுக்கும் விரிவுபடுத்துக  மார்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை

பென்னாகரம், அக்.3- ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை நகரப்பகுதி  மற்றும் அனைத்து கிராமப்பகுதிகளுக்கும் விரிவு படுத்துமாறு  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தி பல ஆண்டுகள் கடந்த நிலையில், ஒகேனக்கல் அருகிலுள்ள நகர மற்றும் கிராமப்பகுதிகளுக்கு குடிநீர் கிடைக்காததால் பொதுமக்கள் பெரிதும் வேதனையடைந்துள்ளனர். குறிப்பாக ஒகேனக்கல் அடுத்துள்ள பென்னாகரம் பேரூ ராட்சிக்குட்பட்ட நீர் குந்தி மற்றும் போன குண்டு, காட்டுக்  கொள்ளை உள்ளிட்ட பகுதிகளுக்கு இதுவரை ஒகேனக்கல் கூட்டு குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. இது குறித்து பலமுறை அதிகாரிகள், மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை. எனவே, ஒகேனக்கல் குடிநீர் திட்டத்தை பென்னாகரம் ஒன்றியத்திற்குட்பட்ட  அனைத்து கிராமங்களுக்கு விரிவுப் படுத்த வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், பொதுமக்களும்  கோரிக்கை விடுத்துள்ளனர். 

ஏரியூர் ஒன்றியத்திற்கு  தனி அலுவலர் நியமித்திடுக

பென்னாகரம், அக்.3- ஏரியூர் ஒன்றியத்திற்கு தனி அலுவலர் நியமிக்க மார்க்சிஸ்ட் கட்சியின் பென்னாகரம் ஒன்றியக்குழு வலியுறுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம், பென்னாகரம் ஒன்றியத் திற்குட்பட்டு ஏரியூர் பகுதி இருந்த நிலையில் ஏரியூரை தனி ஒன்றியமாக அறிவிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட ஜனநாயக அமைப்புகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தது. இதையடுத்து கடந்த 2015ஆம் ஆண்டு ஏரியூர் தனி ஒன்றியமாக அரசு அறிவித்தது. இதில் சுஞ்சல்நத்தம், இராமகொண்டள்ளி, நாகமரை, மஞ்சாரள்ளி, கோடி அள்ளி, பெரும்பாலை, தொன்னகுட்டள்ளி, அஜ்ஐனள்ளி உள்ளிட்ட ஊராட்சிகளை  உள்ளடக்கி ஏரியூர் தனி ஒன்றியம்  என அறிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை ஒன்றியத் துக்கான தனி அலுவலர் நியமிக்கப்படவில்லை. இத னால் அப்பகுதியில் உள்ள 45க்கும் மேற்பட்ட கிராம மக்கள்  அரசு உதவி நல திட்டங்களுக்கு 25 கிமீ தூரத்தில் உள்ள  பென்னாகரத்திற்கு செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.   எனவே ஏரியூர் ஒன்றியத்திற்கு உடனடியாக தனி அலுவலர் நியமிக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.