tamilnadu

img

தீண்டாமை நோக்கத்தோடு செருப்புத் தைக்கும் தொழிலாளர்களை அகற்ற நினைக்கும் காவல்துறை மார்க்சிஸ்ட் கட்சி போராட்டத்தால் பின்வாங்கியது

பென்னாகரம், ஜூன் 6- தீண்டாமை நோக்கத்துடன் பாப் பாரப்பட்டி காவல் துறையினர் செருப்பு தைக்கும் தொழிலாளிகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரி வித்து  பாப்பாரப்பட்டி காவல்நிலை யம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியினர் நடத்திய போராட்டத்தை யடுத்து காவல் துறை பின்வாங்கி யது.  

தருமபுரி மாவட்டம், பாப்பாரப் பட்டியில்   சுமார்  115 ஆண்டுகளாக 25க் கும் மேற்பட்ட குடும்பங்கள் செருப்பு தைத்து தங்களது வாழ்க்கையை நடத்தி வந்தனர். இந்த நிலையில் அவ்விடத்தில் காவல் நிலையம் அமைக்கப்பட்டது. காவல் நிலையம் அமைக்கப்பட்ட பிறகு செருப்பு தைக்கும் தொழிலாளர்களை காலி செய்யும் நோக்கத்தோடு அதிகாரிகள் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டே வந்தனர்.  இதை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பலமுறை போராடி அவர்களுக்கான உரிமையை பெற்று மீண்டும் அதே இடத்தில் அவர்கள் தங்களது தொழிலை செய்து வர ஏற் பாடு செய்து கொடுத்தது.  இந்நிலையில், வெள்ளியன்று மீண்டும்  செருப்பு தைக்கும் தொழிலா ளர்களை காலி செய்யும் நோக்கத் தோடு அவ்விடத்தில்  மண் கொட்டி பூங்கா அமைக்கப் போவதாக தெரிவித் துள்ளனர்.

 இதையறிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தீண் டாமை ஒழிப்பு முன்னணியினர் காவல் நிலையம் முன்பு திரண்டனர். அப் போது, அங்கு வந்த காவல் ஆய்வா ளர் சதீஷ் அவர்களோடு பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு மீண்டும்  செருப்புத் தைக்கும் தொழிலாளி அவ் விடத்தில் தங்களது தொழிலை  செய்யலாம் என்று உறுதியளித் தார். இதையடுத்து அங்கிருந்து அனை வரும் கலைந்து சென்றனர்.  இது குறித்து, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் பாப்பாரப்பட்டி பகுதி செயலாளர் சின்னசாமி கூறுகை யில்,  பாப்பாரப்பட்டியில் 15க்கும் மேற் பட்ட குடும்பங்கள் செருப்பு தைக்கும் தொழிலை செய்து வருகின்றனர்.  

அவர் களை காலி செய்யும் நோக்கத்தோடு காவல்துறை அதிகாரிகள் மற்றும் பேரூராட்சி நிர்வாகமும் இணைந்து செயல்பட்டு வருகிறது. ஏற்கனவே பலமுறை இவர்களுக்கு அதிகாரிகள் இடையூறு கொடுத்தபோது மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பேச்சு வார்த்தை நடத்தி அவர்கள் தொழில் நடத்த அனுமதி பெறப்பட்டது. நெடுஞ் சாலைத் துறை அதிகாரிகளும் அவர் கள் அங்கு அமர்ந்து தொழில் செய் வதற்கு அனுமதி அளித்துள்ளனர். ஆனால், தீண்டாமை நோக்கத்தோடு அவ்வப்போது வரும் காவல்துறை அதி காரிகள் அவர்களை காலி செய்யும் நோக்கத்தோடு செயல்பட்டு கொண்டு வருகின்றனர். இந்த போக்கை கைவிட வேண்டும். அவர்களுக்கான வாழ் வாதாரத்தை நிலைநாட்ட அதிகாரி களும் பேரூராட்சி நிர்வாகமும் உறுதிப் படுத்த வேண்டும் என அவர் தெரி வித்தார்.

;