tamilnadu

img

இண்டூர் குப்பைக்குவியலுக்கு தீ வைப்பு புகைமூட்டத்தால் மூச்சு திணறும் பொதுமக்கள்

தருமபுரி, மார்ச் 23- தருமபுரி மாவட்டம், இண்டூரில் உள்ள குப்பைகுவிய லுக்கு தீ வைத்ததால் அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மூச்சு திணறும் சூழல் ஏற்பட்டுள் ளது. இண்டூரில்- தருமபுரி நெடுஞ்சாலையை ஒட்டி உள்ள ஏரியில் இண்டூர் ஊராட்சி முழுக்க சேகரிக்கப்படும் குப்பை கள் கொட்டப்படுகின்றன. இங்கு கொட்டப்படும் இறைச்சி கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் மருத்துவமனை கழிவுகள் குவியலாக வைத்து தீ வைத்து எரிக்கப்பட் டது. இதிலிருந்து எழும் புகை மூட்டம் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளை மூச்சுத் திணற வைக்கிறது. ஏரிக்கு அருகாமையிலுள்ள திருமண மண்டபம் ஆரம்ப சுகா தார நிலையம் மற்றும் வங்கிகள் ஆகியவற்றுக்கு வரும் பொதுமக்கள் இந்த நச்சுப் புகையால் அவதிக்குள்ளாகி றார்கள். இங்கு வசிக்கும் குடியிருப்புவாசிகள் மிகவும் சிர மத்துக்கு உள்ளாகின்றனர். மேலும் ஏரியில் வெட்டப்பட்டு குடிநீர் ஆதாரமாக விளங்கி வந்த பொதுக் கிணற்றில் குப்பை களைக் கொட்டி தூர்த்து விட்டனர். மேலும், கிணற்றில் கொட்டப்பட்ட குப்பைக்கழிவுக ளும் தீ வைத்து எரிக்க படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படு கிறது. இந்த ஏரிக்கு தளவாய் அள்ளி ஏரியிலிருந்து வரும் நீர்வரத்துக் கால்வாய் இண்டூர் ஏரியின் முகப்பில் கோழி இறைச்சிக் கழிவுகள் மற்றும் கட்டட இடிபாடுகளை கொட்டி வாய்க்கால் அடைபட்டு இருப்பதால் ஏரிக்கு நீர்வரத்து தடை பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் கழிவுநீர் வெளியே வரா மல் துர்நாற்றம் வீசுகிறது. வளர்ந்து வரும் ஊராட்சியாக உள்ள இண்டூருக்கு குப்பைகள் கொட்டுவதற்கு ஊருக்கு வெளியே சற்று தொலைவில் குப்பை கிடங்கு அமைக்க வேண்டும். இதன் மூலம் ஏரியில் குப்பைகள் கொட்டப் பட்டு அழிக்கப்படுவதும் ஏரி தூர்ந்து போவதும் தடுக்கப் படும். சாலையோரம் புகை மூட்டத்தால் ஏற்படும் விபத்து அபாயம் மற்றும் அசௌகரியத்தை தவிர்க்க முடியும் என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.எனவே, குப்பை  கிடங்கை ஊருக்கு வெளியே கொண்டு செல்ல மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இண்டூர் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

;