tamilnadu

img

உள்ளாட்சி தேர்தலில் ஆளும் கட்சியின் அராஜக போக்கு திமுக கூட்டணி கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

 தருமபுரி, ஜன. 14- நடந்து முடிந்த உள்ளாட்சி தேர் தலில் ஆளும் கட்சியினர் வன்மு றையில் ஈடுபட்டதை கண்டித்து திமுக கூட்டணி கட்சியினர் தரும புரி தெலைபேசி நிலையம் முன்பு  கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட் டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில், மொரப்பூர் ஊராட்சி ஒன்றியத் தில், 10 ஒன்றியக் குழு உறுப்பி னர்கள் உள்ளனர். இதில் திமுக 4 பேரும், அதிமுக ஒருவரும், பாமக 3 பேரும், விசிக ஒருவரும், சுயேட்சை ஒருவரும் வெற்றி பெற் றனர். இதில் திமுகவினர் அதிக இடங்களில் வெற்றி பெற்றிருப் பதால் ஒன்றியக் குழுத் தலைவர் பதவிக்கு திமுக மொரப்பூர் ஒன் றிய செயலாளர் செங்கண்ணன் மனைவி சுமதி, ஒன்றியக் குழுத் தலைவர் பதவிக்கு போட்டி யிட்டார். அதிமுக கூட்டணி சார்பில் பாமகவை சேர்ந்த பெருமாள் வேட்புமனு தாக்கல் செய்தார். ஆனால் அதிமுக கூட் டணி கட்சிகளின் அராஜக போக்கல் தேர்தல் ஒத்திவைக் கப்பட்டது.  இந்நிலையில், மொரப்பூர் ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர், துணைத்தலைவர் தேர்தலை ஒத்தி வைத்ததைக் கண்டித்தும், தேர்தலை ஜனநாயக முறைபடி நடத்த வலியுறுத்தியும், மேலும், ஆளும்கட்சிக்கு ஆதரவாக செயல் பட்ட தேர்தல் அதிகாரி மீதும், திமு கவினரை தாக்கிய காவல் துறையினர் மீதும் தேர்தல் ஆணை யம் நடவடிக்கை எடுக்க வேண் டும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். முன்னதாக இந்த ஆர்ப்பாட் டத்திற்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்ரமணி எம்எல்ஏ தலைமை வகித்தார். இதில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  மாவட்டச் செயலாளர் ஏ.குமார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்  மாவட்டச் செயலாளர் தேவராஜ், விடுதலை சிறுத்தைகள் கட்சி  செயலாளர் ஜெயந்தி, மதிமுக மாவட்டச் செயலாளர் அ.தங்க ராசு , இந்திய முஸ்லிம் லீக் நீஜா முதீன், மனித நேய மக்கள் கட்சி மாவட்டத் தலைவர் யாசின் தென்றல், திராவிடர் கழக மாநில அமைப்பு செயலாளர் ஊமை.ஜெயராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

;