tamilnadu

img

சத்துணவு ஊழியர் சங்கத்தினர் வேலை நிறுத்த ஆயத்த மாநாடு

தருமபுரி, அக்.17- தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பில் மாவட்ட அளவிலான வேலை நிறுத்த விளக்க ஆயத்த மாநாடு புதனன்று தருமபுரி பெரியார் மன்றத்தில் நடை பெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் சி.எம்.நெடுஞ் செழியன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் சி. காவேரி கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். தமிழ் நாடு அரசு ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் ஜி. பழனியம்மாள் சிறப்புரையாற்றினார். அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் எம்.சுருளிநாதன், மாவட்டச் செயலாளர் ஏ.சேகர், பொருளாளர் கே.புகழேந்தி, தமிழ்நாடு அரசு நில  அளவையர் ஒன்றிப்பின் மாநிலதுணைதலைவர் அண்ணா குபேரன், அங்கன்வாடி ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ஏ.தெய்வானை ஆகியோர் வாழ்த்தி பேசினர். இம்மாநாட்டில், சத்துணவு திட்டத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியமாக ரூ.9 ஆயிரம் வழங்க  வேண்டும். உணவு மானியத்தை உயர்த்தி வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்பவேண்டும். அரசுபள்ளிகளை மூடக்கூடாது என்பது உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நவ.12 ஆம் தேதி யன்று கவன ஈர்ப்பு பேரணி நடத்துவது, நவ.26ல் மறியல்  போராட்டம் நடத்துவது, அரசு கோரிக்கையை  நிறை வேற்றாத பட்சத்தில் டிச.23 ஆம் தேதி முதல் மாநிலம் தழுவிய தொடர் போராட்டம் நடத்துவது என ஆயத்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. நிறைவாக பொருளாளர் கே. தேவகி நன்றி கூறினார்.  

;