திருச்சிராப்பள்ளி, நவ.9- 12 அம்சக் கோரிக்கைகளை வலி யுறுத்தி அனைத்து மத்திய தொழிற் சங்கங்கள் சார்பில் வரும் ஜனவரி மாதம் 8ஆம் தேதி அகில இந்திய பொது வேலை நிறுத்தம் நடைபெற உள்ளது. இதையொட்டி பொது வேலை நிறுத்த திருச்சி மண்டல ஆயத்த மாநாடு சீனிவாசா மகாலில் வெள்ளியன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு சிஐடியு மாநில துணைத் தலைவர் சிங்காரவேலு தலைமை வகித்தார். கூட்டத்தில் எல்பிஎப், சிஐடியு, ஐஎன்டிசி ஏஐடி யுசி, எச்.எம்.எஸ். ஏஐசிசிடியு, ஏஐசி டியு தொழிற்சங்கங்கள் மற்றும் சம்மேளனங்களின் நிர்வாகிகள் அந் தந்த மாவட்டங்களில் ஜனவரி 8 வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக நடத்துவதற்கு விவாதித்து மாவட்ட வாரியாக கருத்துகளை முன்வைத்து பேசினர். நிறைவாக தொமுசவின் மாநில பொருளாளர் நடராஜன், ஏஐடியுசி மாநில நிர்வாகி சந்திரகுமார், ஏஐசி சிடியு பால்ராஜ், ஏஐசிடியு பாண்டி யன், எச்எம்எஸ் ஜான்சன், ஐஎன்டிசி துரைராஜ் ஆகியோர் சிறப்புரை யாற்றினர். 12 அம்சக் கோரிக்கைக ளை விளக்கி பொதுமக்களிடம் துண்டுப் பிரசுரம் கொடுப்பது. தெரு முனைப் பிரச்சாரம் நடத்துவது என்பன உள்பட பல்வேறு தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன. சிஐடியு மாநில நிர்வாகி ஜெய பால், மாவட்டச் செயலாளர்கள் ரெங்கராஜன், முருகேசன், துரை சாமி, முருகையன், சீனிமணி, ஸ்ரீதர், சிவராஜ், ராஜேந்திரன், ராமர், பன்னீர்செல்வம், சம்பத் மற்றும் தொமுச சங்கத்தை சேர்ந்த சிவ பெருமான், குணா, ஏஐடியுசி மணி. சுரேஷ், ஏஐடிசிசிடியு பாரதி, எச்எம் எஸ் ராஜமாணிக்கம் மற்றும் திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் இருந்து மத்திய தொழிற்சங்க நிர்வா கிகள் மற்றும் தலைவர்கள் கலந்து கொண்டனர்.