தருமபுரி, அக்.9- தருமபுரி மாவட்டம், ராமன்நகர் பகுதி யில் சாக்கடை கழிவுநீர் குளம்போல் தேங்கி நிற்பதால் மலேரியா காய்ச்சல், நோய் தொற்றுகள் ஏற்படும் அபாயம் எழுந்துள்ள தாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன் றியத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஏமகுட்டியூர் ரோடு, ராமன்நகர், இபி காலனி, ஜெயம்நகர், அதியமான் நகர், ஜெய்நகர், நேருநகர் ஆகிய பகுதிகள் உள் ளன. இப்பகுதியில் 5 ஆயிரத்துக்கும் மேற் பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதி யில் ஏமகுட்டியீர் சாலை ராமன் நகரில் சனத்குமார் நதி தடுப்பணை உள்ளது. இந்த நதியில் தற்போது தண்ணீர் வரத்து இல்லை. இந்நிலையில் இப்பகுதியில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் இந்த கால்வா யில் கலப்பதால் குளம்போல் தேங்கி காட்சி யளிக்கிறது. இதனால் சுகாதார சீர் கேடு, தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட் டுள்ளது. குறிப்பாக, தற்போது டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் ஒன்றி யத் தலைவர் எஸ்.எஸ்.சின்னராஜ் கூறுகை யில், இப்பகுதி மாவட்ட ஆட்சியர் அலுவல கம் அருகே உள்ள ஒரு முக்கியமான குடி யிருப்பு பகுதியாகும். இங்கு கழிவுநீர் குட்டையால் மக்கள் காய்ச்சல் மற்றும் தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, குளம் போல் தேங்கிநிற்கும் கழிவு நீரை வெளியேற்ற முறையான சாக்கடை கால்வாய் அமைக்க மாவட்ட நிர்வாகம் உட னடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.