tamilnadu

குடியுரிமை திருத்தச்சட்டத்தை திரும்பப் பெறுக சமூக நல்லிணக்க மேடை தீர்மானம்

தருமபுரி, டிச.31- குடியுரிமை திருத்தச்சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி சமூக நல்லிணக்க மேடையின் சிறப்புக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற் றப்பட்டது.   தருமபுரி அதியமான் அரண் மனையில் நடைபெற்ற இக்கூட்டத் திற்கு தருமபுரி சட்டமன்ற உறுப்பி னர் தடங்கம் பெ.சுப்பிரமணி தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ஏ.குமார் கூட்டத்தின் நோக்கத்தை விளக்கிப் பேசினார். இதில் காங்கி ரஸ் மாவட்ட தலைவர் கோவி.சிற்ற ரசு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி  மாவட்ட செயலாளர் எஸ்.தேவரா ஜன், மதிமுக மாவட்ட செயலாளர் தங்கராஜ், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் த.ஜெயந்தி, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக மாநில  செயலாளர் ஒய்.சாதிக் பாட்சா,  மாவட்ட செயலாளர் தென்றல் யாசின், மார்க்சிஸ்ட்- லெனினிஸ்ட்  கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர்  சி.முருகன், திராவிடர் கழக மாநில  அமைப்புச் செயலாளர்  ஊமை ஜெய ராமன்,  எஸ்டிபிஐ நிர்வாகிகள் நியாமத்,  இர்பான்,   மனித உரிமை  அமைப்பு கே.பி.செந்தில் ராஜா உள்ளிட்ட அனைத்து கட்சி நிர் வாகிகளும்,  இஸ்லாம்,  கிறிஸ்தவ  மற்றும் தொண்டு நிறுவன பொறுப் பாளர்களும் கலந்து கொண்டனர்.  இக்கூட்டத்தில் நிறைவேற்றப் பட்ட தீர்மானங்கள் வருமாறு, மத்திய பாஜக அரசு சமீபத்தில் நிறை வேற்றியுள்ள குடியுரிமை திருத்தச்  சட்டத்தை திரும்பப்பெற வேண்டும். இச்சட்டத்தை திரும்பப்  பெறக்கோரி கேரள மாநில சட்ட மன்றத்தில் நிறைவேற்றப்பட் டுள்ள தீர்மானத்தை  இக்கூட்டம்  வரவேற்கிறது. அதேபோல் தமிழக சட்டமன்றத்திலும்  தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். இச் சட்டத்தை திரும்பப் பெற வலியு றுத்தி வருகிற ஜனவரி 5ஆம் தேதி யன்று பிற்பகல் 2 மணியளவில்  தருமபுரியில் மாபெரும் கண்டனப்  பேரணியும், ஆர்ப்பாட்டமும் நடத்துவது என முடிவெடுக்கப் பட்டது. சென்னையில் இச் சட்டத்தை எதிர்த்து பேரணி நடத்திய தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட  அனைத்துக்கட்சித் தலைவர்கள், பொதுமக்கள் மீதான வழக்கு களையும், தமிழறிஞர் நெல்லை கண்ணன் மீதான வழக்கையும் வாபஸ் பெற வேண்டும் என கூட்டம்  வலியுறுத்துகிறது. மேலும் ஆங் கில புத்தாண்டையொட்டி மாவட் டம் முழுவதும் வீடுகள்தோறும் இச் சட்டத்தை எதிர்த்து கோலப் போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.  ஜனவரி 30ஆம் தேதியன்று மகாத்மா காந்தி நினைவு தினத்தில் பயங்கரவாத எதிர்ப்பு, மனிதநேய மனிதச்சங்கிலி போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.  நிறைவாக சமூக நல்லிணக்க மேடை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஈ.பி.பெருமாள் நன்றி கூறினார். 

;