tamilnadu

img

நூறுநாள் வேலை செய்யும் அனைத்து தொழிலாளர்களுக்கும் சட்டப்படியான கூலி வழங்கிடுக விவசாய சங்கத்தினர் முற்றுகை போராட்டம்

தருமபுரி, ஜூலை 12- காட்டேரி ஊராட்சியில் நூறுநாள் வேலை செய்யும் அனைத்து தொழிலா ளர்களுக்கும் சட்டப்படியான கூலியை வழங்கிட வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தி னர் ஊராட்சி அலுவலகம் முன்பு முற் றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டம், காட்டேரி ஊராட்சியில் நூறுநாள் வேலை உறுதி திட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர் களுக்கு குறைந்த கூலியே வழங்கப் படுகிறது.

மேலும், 50 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கும், மாற்று திற னாளிகளுக்கும் நூறுநாள் வேலை திட்டத்தில் வேலை மறுக்கப்படுகி றது. எனவே, நூறுநாள் வேலைதிட்டத் தில் வேலை செய்யும் அனைத்து தொழி லாளர்களுக்கும் சட்டபடியான கூலி வழங்கவேண்டும். 50 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கும், மாற்றுத்திற னாளிகளுக்கும் வேலை வழங்க வேண் டும் என அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் முற்றுகை போராட்டாத்தில் ஈடுபட்டனர். இத னைத்தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலர் அசோகன், பொறியாளர் சமூகவல்லி, காவல் துறையினர் ஆகி யோர் சங்க நிர்வாகிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

அதில், சட்டபடி யான கூலியும், அனைவருக்கும் வேலையும் வழங்கப்படுவதாக உறுதி யளித்தன் அடிப்படையில் போராட் டம் கைவிடப்பட்டது. இப்போராட்டத்தில், அகில இந் திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் வி.கோவிந்த சாமி, நிர்வாகிகள் வி.சுப்பிரமணி, வரத ராஜ், அப்பகுதி பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

;