தருமபுரி, மே 14-பாப்பிரெட்டிப்பட்டி பெரியார் பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உயர்தரவரிசைப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கல்லூரி முதல்வர் பா.கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டியில் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் பெரியார் பல்கலைக் கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது. இந்தக் கல்லூரியின் சிறப்பான செயல்பாடுகளை ஆய்வு செய்த சேலம் பெரியார் பல்கலைக்கழகம், பாப்பிரெட்டிப்பட்டி கல்லூரிக்கு 2 - எப்மற்றும் 12 - பி குறியீடுகளுடன் தரவரிசைப் பட்டியலில் சேர்த்து அங்கீகாரம் வழங்கியிருப்பதாக கல்லூரி முதல்வர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.