tamilnadu

img

மொரப்பூர் கிராமத்தில் ரூ.12.33 கோடி மதிப்பில் துணை மின் நிலையம் திறப்பு

தருமபுரி, ஜன. 29- தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம், மொரப்பூர் கிராமத்தில் ரூ.12.33 கோடி மதிப்பில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள துணை மின்நிலையத்தை  தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி காணொளி காட்சி யின் வாயிலாக திறந்து வைத்தார்.  தருமபுரி மாவட்டம், மொரப்பூர் பகுதி பொதுமக்களின் எதிர்கால மின் தேவை யினை கருத்தில் கொண்டு புதிய 110/33-11 கே.வி. துணை மின்நிலையம் ரூ.12.33 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது. இத்துணை மின்நிலையத்திலிருந்து மொரப் பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக் கும், தொட்டம்பட்டி 33/11 கே.வி. துணை மின்நிலையம் மற்றும் ஆர்.கோபிநாதம் பட்டி  33/11 கே.வி துணை மின்நிலையம் ஆகியவற்றிற்கு தடையில்லா மின்சாரம் வழங்கப்படும். இதனால், மொரப்பூர், நவலை, எலவடை, வேட்ரப்பட்டி, தாசர அள்ளி, செட்ரப்பட்டி, சென்னம்பட்டி, தம்பி செட்டிபட்டி, அபியம்பட்டி, ஆர்.கோபிநா தம்பட்டி  ஆகிய கிராமங்களுக்கு மின்சாரம் வழங்கப்படும்.  இந்நிலையில், இந்த துணை மின்நிலை யத்தை  புதனன்று தமிழக முதல்வர் எடப் பாடி கே.பழனிசாமி காணொளி காட்சி யின் வாயிலாக திறந்து வைத்தார்.  இந்நிகழ் வின்போது, மாவட்ட ஆட்சியர்  எஸ்.மலர் விழி, அரூர் சட்டமன்ற உறுப்பினர் வே.சம் பத்குமார்,  வேலூர் மண்டல தலைமைப் பொறியாளர் கே.நந்தகோபால் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்ட னர்.

;