tamilnadu

img

மக்கள் நலனில் அக்கறையில்லாத அன்புமணி டெபாசிட் இழப்பார் கே.பாலகிருஷ்ணன் பேச்சு

தருமபுரி, ஏப்.8-மக்கள் நலனில் அக்கறையில்லாத அன்புமணி டெபாசிட் இழப்பார் என பென்னாகரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தருமபுரி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் மருத்துவர் எஸ்.செந்தில்குமாரை ஆதரித்து பென்னாகரம் பேருந்து நிலையம் அருகில் ஞாயிறன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிசார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இப்பொதுக்கூட்டத்திற்கு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.மாதன் தலைமை வகித்தார். மாவட்ட குழுஉறுப்பினார் பி.எம்.முருகேசன் வரவேற்றார். மாநில செயலாளர்கே.பாலகிருஷ்ணன் சிறப்புரைப்புயாற்றினர். அப்போது அவர் பேசியதாவது, இந்த கூட்டத்தை பார்த்தால் அன்புமணி டெபாசிட் இழப்பது உறுதியாகி உள்ளது. அதிமுக கூட்டணி என்றும், பாஜககூட்டணி என்றும் பாமக கூட்டணி என்றும் தனித்தனியாக சொல்கிறார்கள். அமித்ஷா இது தேசிய ஜனநாயக கூட்டணி என்று சொல்கின்றார். கூட்டணிக்கு கூட பெயர்வைக்க முடியவில்லை. இதுபொருத்தமில்லா முரண்பாடான கூட்டணி என்றார்.


அன்புமணியை கைது செய்க

ன்ற தொகுதியில் தான் அன்புமணி போட்டியிட்டார். ஆனால்அவரை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. 10 கோரிக்கையை இராமதாஸ், முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கி இருப்பதாக சொன்னார். ஆட்சியே முடியப்போகிறது, காட்சி முடிவுக்கு வரும்போது கோரிக்கையை தந்திருக்கிறார். எப்படி நிறைவெற்ற முடியும். அன்புமணி 5 வருடங்கள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். ஒருநாளாவது நீட்தேர்வை எதிர்த்து பேசினாரா.5 வருடம் சம்பளம் வாங்கினாரேதவிரவேறு எந்த வேலையும் செய்யவில்லை. ஆட்சி முடியும்நேரத்தில் மொரப்பூர் -தருமபுரிரயில் திட்டம் அடிக்கல் நாட்டினார். மக்களின் நலனில் அக்கறைகொள்ளாத அன்புமணி வாக்குச்சாவடியை கைப்பற்றுவோம் என்று பேசுகிறார். அவர்மீது தேர்தல் ஆணையம் வழக்குதொடுத்து கைது செய்யவேண்டும்.பொள்ளாச்சி பாலியல் பலாத்கார சம்பவத்தில் 200 பெண்களை சீரழித்து இருக்கிறார்கள். இதைபாமக கண்டித்ததா. சில தினங்களுக்கு முன் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதுகுறித்து காவல்துறை அலட்சியமாக உள்ளது. சம்பவத்தில் குற்றவாளிகளை கைது செய்யவில்லை. இப்படிப்பட்ட கேடுகெட்ட அதிமுக உடன் பாமக கூட்டணி வைத்துள்ளிர்களே உங்களுக்கு கேவலமாக இல்லையா. தமிழக அமைச்சர்கள் மீது ஊழல் புத்தகம் வெளியிட்ட இராமதாஸ், தற்போது எடப்பாடியை விட சிறந்த முதலமைச்சர் இல்லை என்று சொல்கிறார். ஆட்சிக்கு வந்தால் விவசாய கடன் ரத்து என்று மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சொல்லியிருக்கிறோம்.


தில்லியில் போராடிய தமிழக விவசாயிகளை அழைத்து பேசவில்லை. மோடியும் அவரது அமைச்சர்களும் அவமதித்தனர். 3 லட்சத்து 65 ஆயிரம் கோடி ரூபாய் பொரும் முதலாளிகளுக்கு கடன் தள்ளுபடி செய்யும் மோடி, விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்யவில்லை.பாமக சாதியை சொல்லியே மக்களை திரட்டுகின்றது. இதுவரை பாமக கட்சி யாரை வாழவைத்திருக்கிறது. கட்சியில் போராடியவர்களையும், கட்சியைவளர்த்தவர்களையும் கட்சியைவிட்டு வெளியே அனுப்பிவிட்டனர். சாதிப் பெயரை வைத்துக்கொண்டு ஒரு குடும்பம் வாழவேண்டும் என்பதே இராமதாசின் நோக்கம். இரு சமூக மக்களிடையே மோதலை உருவாக்கியவர் இராமதாஸ், சாதிவெறியை தூண்டி இந்த சமுதாய இளைஞர்களின் வாழ்க்கையை சீரழித்தனர்.அன்புமணி மத்திய அமைச்சராக இருந்தபோது மருத்துவ கவுன்சில் தலைவர் கேதான்ராய் வீட்டில் 1,500 கிலோ தங்கத்தை பிடித்தனர். இன்றும் அன்புமணி மீது சிபிஐ வழக்கு இருக்கிறது. பாஜக மதக்கலவரத்தை உண்டாக்கிவர்கள் மகாத்மாகாந்தியை கொன்றவர்கள். இவர்களுடதான் அதிமுக, பாமக, தேமுதிக கூட்டு வைத்துள்ளது. எனவேதான் இந்த முரண்பாடான கூட்டணியை வீழ்த்த வேண்டும். மோடியையும், எடப்பாடியையையும் தோற்கடித்து வீட்டிற்கு அனுப்ப தருமபுரி நாடாளுமன்ற தொகுதி திமுகவேட்பாளர் மருத்துவர் செந்தில்குமாருக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெற செய்யவேண்டும் எனகேட்டுக்கொண்டார்.


இதனையடுத்து, பென்னாகரம் திமுக சட்டமன்ற உறுப்பினர் இன்பசேகரன் பேசியதாவது, திமுக ஆட்சி காலத்தில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம்,பென்னாகரம் அரசு மருத்துவமனை தரம் உயர்வு உள்ளிட்ட என்னற்ற திட்டங்களை நிறைவேற்றி உள்ளது. நாங்கள் சாதனைகளை சொல்லி ஓட்டு கேட்கிறோம். ஆனால் அன்புமணி இராமதாஸ் எந்த சாதனைகளை சொல்லி ஓட்டு கேட்பார். 5 ஆண்டு காலம் தருமபுரி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினராக அன்புமணி இராமதாஸ் மக்களுக்கு எந்த நன்மையையும் செய்த வில்லை. சில மாதங்களுக்கு முன்பு அதிமுக அரசை விமர்சித்தும், முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்களை தரக்குறைவாக விமர்சித்து விட்டு அவருடனே கூட்டணி. இது எந்த கொள்கை அடிப்படையிலான கூட்டணி என வினா எழுப்பினார்.இக்கூட்டத்தில், சிபிஎம் மாவட்ட செயலாளர் ஏ.குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.ஆறுமுகம், வே.விசுவநாதன், திமுக ஒன்றிய செயலாளர்கள் சி.செல்வராஜ், என்.செல்வராஜ், நகரசெயலாளர் எம்.வீரமணி, காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் கோ.வி.சிற்றரசு, வட்டதலைவர் முனுசாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் ந.நஞ்சப்பன், மாவட்ட செயலாளர் எஸ்.தேவராசன், வட்ட செயலாளர் முனியப்பன், மதிமுக மாவட்ட செயலாளர் அ.தங்கராசு, ஒன்றியசெயலாளர் முருகேசன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்டசெயலாளர் த.ஜெயந்தி, ஒன்றிய செயலாளர் சரவணன், தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்ட செயலாளர் டி.சி.தவமணி, மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் யாசின் தென்றல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பென்னாகரம் பகுதி இடைகமிட்டி செயலாளர்கள், பாப்பாரப்பட்டி ஆர்.சின்னசாமி, நகரம் எஸ்.வெள்ளிங்கிரி, பென்னாகரம் பகுதி கே.அன்பு, சின்னம்பள்ளி ஜி.சக்திவேல், ஏரியூர் என்.பி.முருகன் உள்ளிட்ட கூட்டணி தலைவர்கள், நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகரகுழு உறுப்பினர் ஜி.சிவன் நன்றி கூறினார்.

;