tamilnadu

img

எரியாத மின்விளக்கால் குற்றச்சம்பவங்கள் அதிகரிக்கும் அவலம்

தருமபுரி, ஜன. 27- தருமபுரி அடுத்த பாரதிபுரத்தில் இருந்து ஒட்டப்பட்டி வரை சாலை நடுவே உள்ள மின்கம்பங்களின் விளக்குகள் எரியாததால், அடிக்கடி  விபத்துகள் மற்றும் குற்றச்சம்ப வங்களும்  நடந்து வருகிறது. தருமபுரி அடுத்த பாரதிபுரத்தில் இருந்து, ஒட்டப்பட்டி வரை, 3 கி.மீ., தூரத்திற்கு, தருமபுரி - சேலம் தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இதில், பாரதிபுரம், இலக்கியம்பட்டி, செந்தில் நகர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அரசு கலைக்கல்லூரி, சவுளுப்பட்டி மற்றும் ஒட்டப்பட்டி ஆகிய பகுதிகள் உள்ளன. ஏழு ஆண்டுகளுக்கு முன்,  சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம் பாட்டு திட்டத்தில்,  இந்த மின்விளக்கு கம்பங்கள் அமைக்கப்பட்டன. இத னால், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள், அச்ச மின்றி சென்று வந்தனர். இந்நிலை யில், இரண்டு ஆண்டுக்கும் மேலாக, இந்த மின்கம்பத்தில் உள்ள விளக்கு கள் எரியாமல் உள்ளது. இதனால், நாள்தோறும் விபத்துகள் ஏற்பட்டு, பலர் காயமடைந்து வருகின்றனர். சில  நேரங்களில், பெரிய அளவில் கூட விபத்துகள் நடக்கின்றன. மேலும், சாலையில் நடந்து செல்லும் பெண்களி டம் வழிப்பறி சம்பவங்கள் அதிகரித்து வருவதாக, பொதுமக்கள் குற்றஞ் சாட்டியுள்ளனர். இதுகுறித்து, அதிகா ரிகளுக்கு பலமுறை வேண்டுகோள் விடுத்தும், நடவடிக்கை இல்லை. வாகன ஓட்டிகளின் நலன்கருதி, எரியா மல் உள்ள மின்விளக்குகளை மீண்டும்  சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வா கத்தை அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

;