tamilnadu

img

தருமபுரி திமுக வேட்பாளர்களை ஆதரித்து மலைவாழ் மக்கள் சங்கம் வாக்குச்சேகரிப்பு

தருமபுரி, ஏப்.5-

தருமபுரி நாடாளுமன்ற தொகுதி, அரூர் (தனி) சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர்களை ஆதரித்து பழங்குடி மக்களிடம் மலைவாழ் மக்கள் சங்கத்தின் தலைவர்கள் வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டனர்.மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தருமபுரிநாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் மருத்துவர் எஸ்.செந்தில்குமார், சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அரூர் (தனி) தொகுதி திமுக வேட்பாளர் செ.கிருஷ்ணகுமார் ஆகியோரை ஆதரித்து தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் பட்டுகோணம்பட்டி ஊராட்சியில் வாக்குசேகரித்தனர். இதில், சங்கத்தின் மாநிலத்தலைவரும் சட்டமன்ற முன்னாள் ஊறுப்பினருமான பி.டில்லிபாபு, டி.என்.வி.செல்வராஜ், மாவட்ட செயலாளர் பழனிசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பாப்பிரெட்டிபட்டி வட்ட செயலாளர் சி.வஞ்சி, மாவட்டகுழு உறுப்பினர் டி.சேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.முன்னதாக, பட்டுகோணம்பட்டி ஊராட்சி, தொம்பகானூர், அடிமலையூர் மலைகிராம பழங்குடி மக்களிடம் வாக்குசேகரித்தனர். அப்போது, குடிநீர் பிரச்சனையை தீர்க்கப்படும். வன உரிமை சட்டத்தின் கீழ் நிலம் மனைப்பட்டா வழங்கப்படும். முதியோர் உதவித்தொகை கிடைக்கநடவடிக்கை எடுக்கப்படும். நூறுநாள் வேலைத்திட்டத்தில் பழங்குடி மக்களுக்கு வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.இதேபோல், தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் திமுகவேட்பாளர் எஸ்.செந்தில்குமாரை ஆதரித்து நடிகர் எம்.ஆர்.வாசு விக்ரம் நல்லம்மள்ளி, காரிமங்கலம் ஆகியஒன்றியங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், காங்கிரஸ் மற்றும் திமுக தேர்தல் அறிக்கை பொதுமக்கள், விவசாயிகள், மாணவ, மாணவியர் என அனைவரிடத்திலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. விவசாயக் கடன் தள்ளுபடி, ரூ.6 ஆயிரம் உதவித்தொகை, நீட் தேர்வு ரத்து, கல்விக் கடன் ரத்து போன்ற திட்டங்கள் கிராமப்புற ஏழை எளிய மக்களை கவர்ந்துள்ளது. எனவே, வரும் தேர்தலில் திமுக வேட்பாளரை பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற செய்ய வேண்டும் என்றார்.இந்நிகழ்ச்சியில் திமுக நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றியச்செயலாளர் சண்முகம், தொண்டர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் எல்.டி.பழனிசாமி, காரிமங்கலம் ஒன்றியச் செயலாளர்கள் குமரவேல், வழக்குரைஞர் எம்.வி.கோபால், மாவட்ட அவைத் தலைவர் மாதையன், ஒன்றியப் பொருளாளர் நல்லதம்பி, இளைஞரணி தங்கதுரை, பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.நல்லம்பள்ளி ஒன்றியத்தில் ஒட்டப்பட்டி, அதியமான்கோட்டை, நாரத்தம்பட்டி, இலளிகம், மிட்டாரெட்டிஅள்ளி ஆகிய கிரமாங்களிலும், காரிமங்கலம் ஒன்றியத்திற்குபட்ட மாட்லாம்பட்டி, பெரியாம்பட்டி, பேகாரஅள்ளி ஆகியோ பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டு வாக்குச் சேகரித்தார்.

;