tamilnadu

உணவு பாதுகாப்பு சட்டத்தை மீறுவோருக்கு அபராதம் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

 தருமபுரி, ஜன.5- தருமபுரி மாவட்டத்தில், உணவு பாது காப்புச் சட்டத்தை மீறுபவர்களுக்கு அபரா தம் விதிக்கப்படும் என மாவட்ட ஆட்சி யர் எஸ்.மலர்விழி எச்சரித்துள்ளார்.  உணவு வணிகர்கள் ஆண்டுக்கு ரூ.12  லட்சத்திற்கு கீழ் கொள்முதல், விற்பனை யாளர்கள் மற்றும் உணவுப் பாதுகாப்பு பதிவுச் சான்று பெற்றவர்கள், சிறு குறு தயாரிப்பாளர்கள் ஆகியோர் உணவுப் பாது காப்பு சட்ட விதிகளை மீறினால் முதல் முறை  கண்டறியப்பட்டால் ரூ.3ஆயிரம், இரண் டாம் முறை என்றால் ரூ.6ஆயிரம், மூன்றாம்  முறை என்றால் ரூ.10ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். 3 முறைக்கு மேல் குற்றம்  செய்தால் உணவு வணிகரின் உணவுப் பாது காப்பு பதிவுச் சான்று ரத்து செய்யப்பட்டு, மேல் நடவடிக்கை எடுக்கப்படும். சிறு மளிகைக் கடை, நடமாடும் உணவு  வணிகர்கள், தற்காலிக கடை நடத்து வோரின் முதல் முறை குற்றத்திற்கு ரூ.1000,  இரண்டாம் முறை என்றால் ரூ.2ஆயிரம், மூன்றாம் முறை என்றால் ரூ.5ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். நாள் ஒன்றிற்கு 500 லிட்டர் வரை பால் விற்போர்,  இறைச்சி விற்போர் போன்றோர் முதல் முறை குற்றம் செய்தால் ரூ.2ஆயிரம், இரண்டாம் முறை குற்றம் செய்தால் ரூ.4 ஆயிரம், மூன்றாம் முறை என்றால் ரூ.10 ஆயிரம் அபராதம் மற்றும் பதிவுச் சான்று ரத்து செய்து நடவடிக்கை எடுக்கப்படும். தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை கண்ட றிந்தால் ரூ.5ஆயிரம் முதல் ரூ.25ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்பட்டு, உணவு பாதுகாப்பு பதிவுச் சான்று ரத்து செய்யப்படும். மேலும், செய்தித்தாள்களில் உணவு பரிமாறுதல், பொட்டலமிடுதல் மற்றும் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களில் உணவுப் பொருட்களை பொட்டலமிடுதல் கண்டறியப்பட்டால் ரூ.2ஆயிரம் முதல் ரூ.10ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்பட்டு, பதிவுசான்று ரத்து செய்யப்படும். மேலும் உணவுப் பாது காப்பு பதிவுச் சான்று பெறாமல் உணவு வணிகம் செய்பவர்களுக்கு ரூ.5ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். எனவே, அனைத்து உணவு வணிகர்கள் உணவுப் பாதுகாப்பு தரநிர்ணயச் சட்டம்  2006 மற்றும் விதிகள் 2011-க்கு உட்பட்டு தங்களது உணவு வணிகத்தை செய்திட அறிவுறுத்தப்படுகிறது. மேலும், பொது மக்கள் உணவுப் பொருட்கள் தொடர்பான தங்களது புகார்களை 94440 42322 என்ற  வாட்ஸ்அப் எண்ணில் புகார் தெரிவிக் கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித் துள்ளார்.

;