tamilnadu

img

மலைக்கிராம மக்களுக்கு அடிப்படை வசதி செய்துதரப்படும் தருமபுரி திமுக வேட்பாளர் மருத்துவர் எஸ்.செந்தில்குமார் வாக்குறுதி

தருமபுரி, ஏப்.4-

மலைக்கிராம மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்துதரப்படும் என தருமபுரி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் மருத்துவர் எஸ்.செந்தில்குமார் வாக்குறுதி அளித்தார். திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் மருத்துவர் எஸ்.செந்தில்குமார் போட்டியிடுகிறார். இவர் வியாழனன்று பென்னாகரம் வட்டத்தில் உள்ள கிராமங்களில் தீவிரவாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டர். அப்போதுஅவர் வாக்குசேகரித்து பேசுகையில், நான் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வுசெய்யப்பட்டால் உங்களின்வீடுதேடி குறைகேட்டு நிவர்த்திசெய்வேன். விவசாயிகளின் கடன் ரத்து செய்யப்படும். மலைகிராம மக்களுக்கு குடிநீர், அரசு வீடு, சாலை வசதி பேருந்து, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படும்.மேலும், நூறுநாள் வேலைத்திட்டத்தில் பல கிராமங்களுக்கு வேலைதரவில்லை. காங்கிரஸ், திமுக ஆட்சிக்கு வந்த உடன் நூறுநாள் வேலைதிட்டத்தில் 150 நாட்களாக வேலை வழங்கப்படும். சட்டப்படியான கூலிவழங்க நடவடிக்கை எடுக்கப்படும். பென்னாகரம் வட்டத்தில் பல்வேறு கிராமங்களில் குடிநீர் பிரச்சனை உள்ளது. ஒகேனக்கல் குடிநீர் அனைத்து கிராமங்களுக்கும் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஆகவே எனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்குவித்தியாசத்தில் வெற்றிபெற செய்யவேண்டும் என கிராமமக்களை கேட்டுக்கொண்டார்.இந்த பிரச்சாரத்தின் போது, திமுக மாவட்ட செயலாளர் தடங்கம் பெ.சுப்பிரமணி எம்.எல்.ஏ, பி.என்.பி.இன்பசேகரன் எம்.எல்.ஏ, பென்னாகரம் ஒன்றிய செயலாளர் சி.செல்வராஜ், என்.செல்வராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.மாதன், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.தேவராசன், மாநிலக்குழு உறுப்பினர் காதர், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொகுதிசெயலாளர் கருப்பண்ணன் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர்.இப்பிரச்சாரம் கொப்பலூரில் துவங்கிய கலப்பம்பாடி, கோடல்பட்டி, நரசிம்மபுரம், புதுப்பட்டி, சின்னகடமடை, பெரியகடமடை, தின்னூர், மஞ்சநாய்க்கனஅள்ளி, சின்னபள்ளத்தூர் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டகிராமத்தில் பிரச்சாரம் நடைபெற்றது. வேட்பாளர் மருத்துவர் எஸ்.செந்தில்குமாருக்கு மேளதாளத்துடன் கிராமங்களில் பெண்கள் ஆரத்தி எடுத்துஉற்சாக வரவேற்றனர்.

;