tamilnadu

img

தருமபுரி ஒன்றியத்தில் பாப்பிரெட்டிபட்டி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

தருமபுரி, ஏப்.3- பாப்பிரெட்டிபட்டி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஆ.மணி தருமபுரி ஒன்றியத்தில் தீவிர வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டார். திமுக தலைமையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் பாப்பிரெட்டிபட்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் திமுக வேட்பாளர் வழக்கறிஞர் ஆ.மணி தருமபுரி ஒன்றியம் கோணங்கிநாய்க்கன அள்ளி, வெள்ளாளப்பட்டி, ஆண்டி அள்ளி, மாரவாடி ஊராட்சி ஆகியஊராட்சிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் வீடுவீடாகசென்று வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டார்.இதில், திமுக ஒன்றிய செயலாளர்எஸ்.ஆர்.சேட்டு மற்றும் சர்க்கரை உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் பங்கேற்றனர்.

;