tamilnadu

மெணசி சாலையில் தொடரும் விபத்து வேகத்தடை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

தருமபுரி, ஜன. 20- பாப்பிரெட்டிப்பட்டி அருகே மெணசி சாலையில் விபத்துகள் அதிகரித்து வரும் நிலையில், உயிர்பலியை தடுக்க வேகத் தடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண் டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர். பாப்பிரெட்டிப்பட்டியில் இருந்து மெணசி செல்லும் சாலையில் மோளயானூர் ஊராட்சிக்குட்பட்ட பாலக்காடு பகுதியில் தார்ச்சாலை வளைந்து செல்கிறது. இத னால், அப்பகுதியில் விபத்துகள் அதிக ரித்து வருகிறது. இதனை தடுக்கும் வகை யில் வேகத்தடை அமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறி யதாவது, இந்த சாலை வழியாக தினசரி 20க்கும் மேற்பட்ட பேருந்துகள் மற்றும் நூற்றுக்கணக்கான கனரக வாகனங்கள், 50க்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல் லூரி வாகனங்கள் செல்கின்றன. மேலும், ஆயிரக்கணக்கான இரு சக்கர வாக னங்களும் சென்று வருகின்றன. ஆனால், இந்த சாலையானது மிகவும் வளைவாக உள்ளது. இதனால், வேகமாக வரும் வாக னங்கள் திரும்ப முடியாமல் தினசரி விபத்துகள் நடைபெறுவது வாடிக்கையாக உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம்  பல முறை தகவல் தெரிவித்தும், இது வரை எந்த வித நடவடிக்கையும் எடுக்காததால் விபத்து அபாயம் அதிகரித்துள்ளது. என வே, மிகப்பெரிய அசம்பாவிதம் ஏற்படும் முன்பு வேகத்தடை அமைக்க மாவட்ட நிர் வாகம் முன்வர வேண்டும் என தெரி வித்துள்ளனர்.

;