tamilnadu

img

தனியார் நுண்நிதி நிறுவனங்களை கண்டித்து மாதர் சங்கம் முற்றுகைப் போராட்டம்

தருமபுரி, ஆக. 27- தனியார் நுண் நிதி நிறுவனங்க ளின் அடாவடி வசூல் நடவடிக் கையை கண்டித்து ஜனநாயக மாதர் சங்கத்தினர் மற்றும் நகர்ப்புற வாழ்வாதார பெண்கள் கூட்ட மைப்பினர் தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தருமபுரி மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கால் பல்லா யிரக்கணக்கான மக்கள் வேலை வாய்ப்பின்றி தவித்து வருகின்ற னர். ஆகவே, இக்காலத்தில் நிதி நிறுவனங்கள் கடன் தவணை மற் றும் வட்டியை வசூலிக்கக்கூடாது என மத்திய, மாநில அரசுகள் உத் தரவிட்டுள்ளன. ஆனால், இதற்கு மாறாக மகளிர் சுய உதவிக் குழுவினர் உள்ளிட்டோர் தனியார் நுண் நிதி நிறுவனங்களிடமிருந்து பெற்ற கடனைக் கட்டச்சொல்லி அந்நிறுவன ஊழியர்கள் நிர்பந் தித்து வருகின்றனர். இப்பிரச்சனை குறித்து மாவட்ட ஆட்சியரிட மும், மாவட்ட காவல் கண்காணிப் பாளரிடமும் பலமுறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.  எனவே, தருமபுரி மாவட்ட நிர்வாகம் இப்பிரச்சனையில் தலை யிட்டு பெண்களை மிரட்டும் தனி யார் நுண்நிதி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும்,  நீதிமன்ற உத்தரவு வரும் வரை கடன் வசூல் செய்வதைக் கைவிட வேண்டி வலியுறுத்தியும் அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்கத் தினர் மற்றம் நகர்ப்புற வாழ்வாதார பெண்கள் கூட்டமைப்பினர் தரு மபுரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்திற்கு மாதர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.கிரைஸாமேரி தலைமை வகித்தார். இதில், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாநிலத் தலைவர் பி.டில்லிபாபு, வாலிபர் சங்க முன்னாள் மாவட்டச் செயலாளர் ஏ.குமார், நகர்ப்புற வாழ்வாதார பெண்கள் கூட்டமைப்பின் மாநில அமைப்பாளர் எம்.சங்கர், தலை வர் ஆயிஷா ஜாஸ்மின், விவசா யிகள் சங்க மாவட்டச் செயலாளர் சோ.அருச்சுணன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலை வர் டி.எஸ்.ராமச்சந்திரன், மாதர் சங்க மாவட்டத் தலைவர் ஏ.ஜெயா, பூபதி உட்பட பலர் கலந்து கொண்ட னர்.  இப்போராட்டத்தை அறிந்த தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் (பொறுப்பு) தனிகாசலம், போராட் டத்தில் ஈடுபட்டவர்களிடம்  பேச்சு வார்த்தை நடத்தி ஆக. 31ஆம் தேதியன்று தனியார் வங்கிகள், நுண்நிதி நிறுவனங்கள் கடன் வாங்கியோர் உள்ளடக்கிய கூட்டம் நடைபெறும். அதுவரை கடன் வசூ லிக்க மாட்டார்கள் என உறுதிய ளித்தார். இதையடுத்து போராட் டத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்து அனைவரும் கலைந்து சென்றனர். 

;