tamilnadu

img

குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நிறைவேற்ற வேண்டும்

பென்னாகரம், பிப்.20- குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டுமென பென்னாகரம் ஒன்றியக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.   பென்னாகரம் ஒன்றியக்குழு கூட்டம் வட்டார வளர்ச்சி  அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழு தலைவர் கவிதா ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.  வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணன் முன்னிலை வகித் தார். இக்கூட்டத்தில் போர்க்கால அடிப்படையில் குடிநீர் வசதிகள் செய்து தர வேண்டும். பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல் மற்றும்  சுகாதார திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். புதிய சாலைகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது  உள்ளிட்ட அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்யுமாறு  தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  இக்கூட்டத்தில் ஒன்றியக்குழு துணைத் தலைவர் அற்புதம் அன்பு மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பி.சக்கரைவேல், ராதிகா, அன்பரசு உள்ளிட்ட ஒன்றிய குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். நிறைவாக  வட்டார வளர்ச்சி  அலுவலர் தண்ட பாணி நன்றி கூறினார். 

;