tamilnadu

img

சட்டவிரோத தத்தெடுப்பைத் தடுத்தல் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம்

தருமபுரி, ஜன. 30- குழந்தை தத்தெடுப்பு விதிமுறைகள் 2017 மற்றும் சட்டவிரோத தத்தெடுப்பை தடுத்தல் பற்றிய  விழிப்புணர்வு ஏற்படுத்து வது குறித்த கருத்தரங்கை தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி அரங்கத்தில் மாவட்ட ஆட்சியர்  எஸ்.மலர்விழி துவக்கிவைத்தார். இந்நிகழ்ச்சியை துவக்கி வைத்து  மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழி பேசுகை யில், தத்தெடுப்பு நடைமுறை விதிகள் 2017 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டுள்ளது. கிரா மப்புறங்களில் பல்வேறு சூழல் காரணமாக குழந்தைகளை வளர்க்க முடியாத நிலை யில் பெற்றோர்கள் இருப்பதை காணமுடி யும். இந்நிலையில் தத்தெடுக்கும் சட்டதிட்ட நடைமுறைகள் என்னென்ன இருக்கிறது என்பதை நன்கு அறிந்துகொள்ள வேண் டும்.  இரண்டுக்கு மேற்பட்ட குழந்தைகள் வேண்டாம் என்று சொல்லக்கூடிய பெற் றோர்களும் இருக்கிறார்கள். ஒரு குழந் தையை பெற்றெடுத்து வளர்ப்பதற்கு வாய்ப்பும், தகுதியும் இல்லாமலும்  பெற் றோர்கள் இருக்கிறார்கள்.  எனவே, தத்தெடுக்கும் சட்டதிட்டங்கள்,  குழந்தைகளை தத்தெடுக்கும் நடைமுறை கள் மற்றும் சட்ட திட்டங்களை விளக்க மாக எடுத்துக் கூறினால்  சமுதாயத்திலேயே ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்த முடியும் என மாவட்ட ஆட்சியர்  கூறினார். முன்னதாக இவ்விழாவில் தருமபுரி கூடுதல் மாவட்ட நீதிபதி எம்.ஜீவானந்தம், மாவட்ட கூடு தல் காவல் கண்காணிப்பளர் சுஜாதா,  அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் கே.சீனி வாசராஜ், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சிவகாந்தி, துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் பி.ஆர்.ஜெமினி, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் முத்துக்கிருஷ்ணன், நிர்மலா குழந்தைகள் தத்தெடுப்பு மைய கண்காணிப்பாளர்  ஜெ.சுப்பிரியா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

;