tamilnadu

img

ஊராட்சிக்கு நிதி ஒதுக்காததைக் கண்டித்து ஊராட்சி மன்றத் தலைவர் தீக்குளிக்க முயற்சி

தருமபுரி, செப்.11- அடிலம் ஊராட்சியில் அடிப் படை வசதிகளை செய்து கொடுக்க  நிதி ஒதுக்காத மாவட்ட நிர்வா கத்தைக் கண்டித்து ஊராட்சி மன்ற தலைவர் தீக்குளிக்க முயன்ற சம்ப வம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. தருமபுரி மாவட்டம், காரி மங்கலம் ஒன்றியத்துக்குட்பட்டது அடிலம் ஊராட்சி. கடந்த 8 மாதங்க ளுக்கு முன் நடைபெற்ற உள்ளாட்சி  தேர்தலில் அடிலம் ஊராட்சி மன்றத் துக்கு தீபா அன்பழகன் வெற்றி பெற்றார்.  இதைத்தொடர்ந்து அடி லம் ஊராட்சியில் நீண்ட ஆண்டுக ளாக பிரச்சனையாக உள்ள தெருவி ளக்கு, குடிநீர்,  மேல்நிலை நீர்தேக் கத் தொட்டி, சாலைவசதி கழிவுநீர் கால்வாய்  உள்ளிட்ட தேவைகளை பூர்த்தி செய்ய போதிய நிதி ஒதுக்க வில்லை  இந்நிலையில் ஊராட்சிக்கு தேவையான நிதி ஒதுக்கக்கோரி அடிலம் ஊராட்சிமன்றத் தலைவர் தீபா அன்பழகன், மாவட்ட ஆட்சி யரை சந்திக்க வெள்ளியன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந் திருந்தார்.  

ஆனால், மாவட்ட ஆட்சியரை சந்திக்க அவருக்கு அனு மதி மறுத்ததால் தீடீரென தான்  பையில் வைத்திருந்த மண்ணெண் ணையை தன் மீது ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றார்.  இதையடுத்து அருகிலிருந்தவர்கள் அவரை தடுத்து காப்பாற்றினர். இதுகுறித்து ஊராட்சிமன்ற தலைவர் தீபாஅன்பழகன் கூறுகை யில், பஞ்சாயத்து ராஜ்ய சட்டத்தின் படி ஊராட்சிக்கு தேவையான நிதியை ஒதுக்காமால் உள்நோக் கத்துடன் மாவட்ட நிர்வாகம் வெவ்வேறு பணிகளுக்கு நிதி  ஒதுக்குகிறது. மேலும் ஊராட்சி மன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் ஊராட்சியில் வேறு பணிக்கு ஒப்பந் தபுள்ளி டெண்டர் விடப்படுகிறது. எனவே மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்திசெய்யும் வகையில் உரிய நிதி ஒதுக்கவேண் டும் என ஆவேசமாக தெரிவித்தார்.

;