பென்னாகரம், மே 21 - பென்னாகரத்தில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த இருவரை காவல் துறையினர் கைது செய்த னர். தர்மபுரி மாவட்டம் பென் னாகரம் பேரூராட்சி முள்ளு வாடி சேர்ந்தவர் மணிமாது (வயது 50), இவர் மீது ஏற் கனவே பல்வேறு வழக்குள் நிலுவையில் உள்ளது. இந் நிலையில், ஊரடங்கு காலத் தில் பூட்டியிருந்த வீட்டை உடைத்து மாரண்டள்ளி யில் 1 சவரன் நகையையும், பாப்பாரப்பட்டியில் ஐந்து சவரன் நகையையும், நூல அள்ளியில் ரூ.5300 பணம் மற்றும் கோழி உள் ளிட்டவை திருடிச் சென்றுள் ளார். இதுதொடர்பாக பென்னாகரம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வந்தனர். இந்நிலையில், முக்கம் பட்டி பிரிவு சாலையில் பென்னாகரம் உதவி காவல் ஆய்வாளர் சுப்பிரமணி வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந் தார். அப்போது சந்தேகத் திற்கு இடமாக இருசக்கர வாகனத்தில் வந்த இரு வரை பிடித்து விசாரி த்தபோது, அவர்கள் முன் னுக்குப்பின் முரணான தக வல்களைக் கூறினர். பின் னர் விசாரணையில் தொடர் திருட்டில் ஈடுபட்டதை ஒப்புக் கொண்டுள்ளனர். திருட்டுக்கு உடந்தையாக இருந்த மணிமாது சகோதரி மல்லிகாவையும் (60) மணி மாதுவையும் கைது செய்து பென்னாகரம் காவல் துறையினர் சிறையில் அடைத்தனர். இவர்களி டமிருந்து 6 பவுன் நகை உள்ளிட்ட பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.