tamilnadu

img

சிவாடியில் பெட்ரோலியம் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதை கைவிடுக

தருமபுரி, அக்.6- தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டத்தில் உள்ள சிவாடியில் பெட்ரோலிய  சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கு, அப் பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.  தெலுங்கானா மாநிலம், விஜயவாடா மாவட்டம் கொண்டப்பள்ளியில் இருந்து பெட்ரோலியம் எண்ணெயை குழாய் மூலம் 697 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிருஷ்ணகிரி மாவட்டம் வழியாக தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டத்தில் உள்ள  சிவாடி கிராமத்தில் இந்துஸ்தான் பெட் ரோலியம் கார்ப்பரேசன் (லிமிடெட்) நிறு வனம் பெட்ரோலியம் சுத்திகரிப்பு நிலையம்  அமைக்க முடிவுசெய்துள்ளது. இத்திட்டத் திற்கு அரசு சார்பில் ரூ.1,813 ஒதுக்கீடு செய்துள்ளது. மேலும், பெட்ரோலியம் சுத்தி கரிப்பு நிலையம் அமைப்பதற்கு சிவாடி கிராமத்தில் (புல எண்.161 முதல் 293) நிலம்  கையகப்படுத்தும் நடவடிக்கையில் ஈடு பட்டுள்ளனர். இந்நிறுவனம் கையகப்படுத்தப்பட உள்ள நிலம் 150க்கும் மேற்பட்ட குடும்பங் களுக்கு சொந்தமானது. இவர்களில் 80  சதவிகிதம் மக்கள் தலித் சமூகத்தைச் சேர்தவர்கள் ஆவார்கள். இவர்கள் இந்த நிலத்தில் பல தலைமுறைகளாக விவசாயம் செய்து வருகின்றனர். நஞ்சையும்,புஞ்சை யும் கலந்த இந்நிலத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட தென்னை உள்ளிட்ட இதர மரங்கள் உள்ளன. இப்பகுதி குடியிருப்புகள்  உள்ளிட்ட கோவிலுக்கு சொந்தமான நிலம் மற்றும் கிறிஸ்துவ தேவாலயங்களின் நிலங்களும் உள்ளது. இந்த நிலத்தில் தான்  இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்ப ரேசன் நிறுவனம் எண்ணெய் சுத்திகரிப்பு  நிலையம் அமைக்க முடிவு செய்துள்ளது. இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நல்லம்பள்ளி ஒன்றியச் செய லாளர் கே.குப்புசாமி கூறுகையில், சிவாடி கிராமத்தில்  இந்துஸ்தான் பெட்ரோலியம் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பது கார்ப்ப ரேட் நிறுவனங்களுக்கு லாபம் தருவதற் காகவே. அதேநேரம் ஏழைகளுக்கு பாதிப்பு  ஏற்படுத்தும்  வகையிலான இத்தகைய திட்டத்துக்கு விவசாய நிலங்களை கையகப் படுத்தக்கூடாது. இத்திட்டத்துக்கு விவ சாயத்துக்கு பயன்படாத புறம்போக்கு நிலத்தை பயன்படுத்த வேண்டும் என அவர் தெரிவித்தார்.  

;