தருமபுரி, பிப்.20- குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்திய இஸ்லாமிய அமைப் பினர் உள்ளிட்ட 450 பேர் மீது தருமபுரி நகர போலீசார் வழக்குப்பதிவு செய்துள் ளனர். தருமபுரியில் அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து புதனன்று போராட் டம் நடைபெற்றது. தருமபுரி பாரதிபுரம் 60 அடி சாலையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் இஸ்லாமியர்கள் திராளாக கலந்து கொண்டனர். இதனையடுத்து தருமபுரி நகர போலீசார் அனுமதி இன்றி ஒலிபெருக்கி வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டதாக தருமபுரி மாவட்ட ஜமாத்துல் உலமா சபை மவுலவி பஜல் கரீம் ஹஜ்ரத், செயலாளர் மௌலவி ஹப்புல்லாஹ் ஹஜ்ரத், மனிதநேய மக்கள் கட்சி சாதிக் பாட்ஷா, ஜாவீத், தென்றல் யாசின் உள் ளிட்ட 450 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.