tamilnadu

தருமபுரி மத்திய கூட்டுறவு வங்கி மூலம் ரூ.1.61 கோடியில் கடன் உதவி

தருமபுரி, ஜூன் 7- பாப்பிரெட்டிப்பட்டி மற்றும் அரூர் மாவட்ட மத் திய கூட்டுறவு வங்கி  கிளைகளின் சார்பில் 200 க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு நலதிட்ட உதவிகள் வழங்கப்பட்டது. தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி மற்றும் அரூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளின் சார்பில் வழங்கப்பட்ட நிகழ்விற்கு மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழி தலைமை வகித் தார். 275 பயனாளிகளுக்கு ரூ.1.61 கோடி மதிப்பில் சிறப்பு கடன் உதவிகளை உயர்கல்வித்துறை அமைச் சர் கே.பி.அன்பழகன் வழங்கினார். பின்னர் அமைச் சர் கே.பி.அன்பழகன் பேசியதாவது, தருமபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி பாப்பிரெட்டிப் பட்டி கிளையின்  சார்பில் 50 மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு ரூ.4 லட்சம் மதிப்பில் கடன், 44 பயனாளிக்கு ரூ.35.45 லட்சம்  மதிப்பில் டாம்கோ கடன், 7 மாற்றுதிறனாளி களுக்கு ரூ.6.93 லட்சம் மதிப்பில் கடன், ஒரு பணி புரியும் மகளிருக்கு ரூ.7லட்சம் மதிப்பில் கடன், 64 பயனாளிகளுக்கு ரூ.32லட்சம் மதிப்பில் சிறு வணிக கடன் என மொத்தம்  166 பயனாளி களுக்கு  ரூ.85 லட்சத்து 38 ஆயிரம் மதிப்பிலான சிறப்பு கடன் உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.  

மேலும், தருமபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி அரூர் கிளையின்  சார்பில் 16 மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு ரூ.6.72 லட்சம் மதிப் பில் கடன் 19 பயனாளிக்கு ரூ.14.44 லட்சம் மதிப்பில் டாம்கோ கடன்,  2 மாற்றுதிறனாளிகளுக்கு ரூ.75 ஆயிரம் மதிப்பில் கடன், 34 பயனாளிகளுக்கு ரூ.15.70 லட்சம் மதிப்பில் சிறு வணிக கடன், 3 மக ளிர் தொழில்முனைவோர்களுக்கு ரூ.1.50 லட்சம் மதிப்பில் கடன், ஒரு பயனாளிக்கு ரூ.6 லட்சம் மதிப் பில் வீட்டு அடமானக்கடன் என மொத்தம்  109 பய னாளிகளுக்கு   ரூ.75 லட்சத்து 71 ஆயிரம் மதிப்பில் ஆக மொத்தம் 275 பயனாளிகளுக்கு ரூ.1.61 கோடி மதிப்பில் சிறப்பு கடன் உதவிகளை வழங்கியதில் மகிழ்ச்சியடைவதாக தெரிவித்தார். இவ்விழாவில், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி, அரூர் சட்டமன்ற உறுப்பினர் சம்பத்குமார், தருமபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் ராம தாஸ் ஆகியோர் பங்கேற்றனர்.

;