tamilnadu

img

பழவேற்காடு ஏரி முகத்துவாரத்தை தூர்வாராதது ஏன்?

சென்னை  உயர்நீதிமன்றத்தில்  தமிழக அரசு விளக்கம்

சென்னை, ஆக. 11- காலநிலை மாற்றத்தால் பழவேற்காடு  ஏரி முகத்துவாரத்தை தூர் வார முடிய வில்லை என்று தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. பழவேற்காடு ஏரியும், கடலும் சந்திக்கும் முகத்துவார பகுதிகளை தூர்வார, மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரி, திரு வள்ளூர் மாவட்டம், பழவேற்காட்டை சேர்ந்த  உஷா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத் தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி, கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர்  முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறி ஞர் “பழவேற்காடு ஏரியின் முகத்து வாரத்தை தூர்வார ரூ.27 கோடி நிதி ஒதுக்கப்  பட்டுள்ளது. கடலின் மாறுபட்ட காலநிலை, காற்றின் வேகம் போன்ற காரணங்களால் முகத்துவாரத்தை தூர்வார முடியவில்லை” என்று கூறினார். இதையடுத்து, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் 2 வாரங்களில் பதில் அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

;