tamilnadu

img

ஒன்றிய துணைத் தலைவர் பதவி: 10 இடங்களில் திமுக வெற்றி

சென்னை,ஜன.31- தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப் பட்டுள்ளதாவது:- ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் கடந்த  11 ஆம் தேதி நடைபெற்ற மறைமுகத் தேர்தல்க ளின்போது பல்வேறு காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்ட மாவட்ட ஊராட்சித் தலை வர் மற்றும் துணைத் தலைவர், ஊராட்சி ஒன்றி யத் தலைவர் மற்றும் துணைத் தலைவர் மற்றும் கிராம ஊராட்சி துணைத் தலைவர் பதவியிடங்களுக்கான மறைமுகத் தேர்  தலை ஜன.30 அன்று நடத்த தமிழ்நாடு மாநில  தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இந்த மறைமுகத் தேர்தலில், ஒரு மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவியிடம் மற்றும் ஒரு மாவட்ட ஊராட்சி துணைத் தலை வர் பதவியிடம் ஆகியவற்றுக்கு போதிய எண்ணிக்கையில் உறுப்பினர்கள் வருகை தராத காரணத்தால் மீண்டும் தேர்தல் தள்ளி  வைக்கப்பட்டது. 

ஊராட்சி ஒன்றிய தலைவர்களுக்கான 26 பதவியிடங்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்த மறைமுகத் தேர்தலில், நீதிமன்ற உத்தரவின் காரணமாக ஒரு இடத்திற்கும், போதிய எண்ணிக்கையில் உறுப்பினர்கள் வருகை தராத காரணத்தால் 9 பதவியிடங்களுக்கும் சட்டம், ஒழுங்கு பிரச்சனை காரணமாக 2 பதவியிடங்களுக்கும் மறைமுகத் தேர்தல் நடைபெறவில்லை. மீதமுள்ள 14 பதவியிடங்களுக்கு நடை பெற்ற மறைமுகத் தேர்தலில் அதிமுக 7 இடங்களிலும், திமுக 4 இடங்களிலும், பாமக  2 இடங்களிலும் வெற்றி பெற்றன. சுயேச்சை  வேட்பாளர் ஒரு இடத்தில் வெற்றி பெற்றுள் ளார்.

ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர்க ளுக்கான 41 பதவியிடங் களுக்கு அறிவிக்கப்  பட்டிருந்த மறைமுகத் தேர்தலில், நீதிமன்ற  உத்தரவின் காரணமாக ஒரு இடத்திற்கும், போதிய எண்ணிக்கையில் உறுப்பினர்கள் வருகை தராத காரணத்தால் 16 பதவியிடங்க ளுக்கும், சட்டம் - ஒழுங்கு பிரச்சனை காரண மாக 2 பதவியிடங்களுக்கும் மறைமுகத் தேர்தல் நடைபெறவில்லை. மீதமுள்ள 22 பதவியிடங்களுக்கு நடை பெற்ற மறைமுகத் தேர்தலில்  திமுக 10 இடங்க ளிலும், அதிமுக 5 இடங்களிலும், காங்கிரஸ்,  மதிமுக, பாமக தலா ஒரு இடத்திலும் வெற்றி  பெற்றன. சுயேச்சை வேட்பாளர்கள் 4 இடங்க ளிலும் வெற்றி பெற்றுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

;