tamilnadu

img

மு.க.ஸ்டாலின் மீது அவதூறு வழக்கு: தமிழக அரசு முடிவு

சென்னை, ஜன. 10- திமுக தலைவர் மு.க. ஸ்டா லின் மீது அவதூறு வழக்கு தொடர தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான நடவடிக்கைகளில் தீவிரம் காட்டப்பட்டு வருகிறது. சென்னை மாநகராட்சியில் நடைபெறும் பணிகளில் ஆற்று மணலுக்கு பதில் எம். சாண்டை பயன்படுத்தியதில் ரூ.1000 கோடி ஊழல் நடந்திருப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியிருந்தார். இது தொடர்பாக கடந்த மாதம்  அவர் வெளியிட்டிருந்த அறிக்கை யில், மாநகராட்சி பகுதிகளில் நடை பாதை அமைக்கும் திட்டங்கள், ஸ்மார்ட் சிட்டி மற்றும் உலக வங்கி  உதவியுடன் நடைபெறும் ஒப்பந்த பணிகளில், ஆற்று மணலுக்கு பதில் எம்.சாண்டை பயன்படுத்தி இந்த முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறியிருந்தார்.

ரூ.1000 கோடி ஊழல் குற்றச்  சாட்டு தொடர்பாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது மு.க.ஸ்டாலின் புகார் கூறியிருந்தார். இதற்கு மறுப்பு தெரிவித்து அதிமுக சார்பில் விளக்கமும் கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் மு.க. ஸ்டாலின் மீது அவதூறு வழக்கு தொடர தமி ழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்  கான நடவடிக்கைகளில் தீவிரம் காட்டப்பட்டு வருகிறது. வழக்கு தொடர்வது தொடர்பான அரசா ணையை தமிழக அரசு வெளி யிட்டுள்ளது. இதையடுத்து சென்னை செசன்ஸ் நீதிமன்றத்தில் மு.க.ஸ்டா லின் மீது விரைவில் அவதூறு வழக்கு தொடரப்பட உள்ளது. 499  சட்டப்பிரிவின் கீழ் ஒரு அவதூறு  வழக்கு தொடர்ந்த பின்னர் நீதி மன்றத்திலிருந்து மு.க.ஸ்டாலி னுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன.

;