சென்னை, மே 9- உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப் பட்ட பொதுநல வழக்கில், நிபந்தனை களை அமல்படுத்தாததால், தமிழ கத்தில் ஊரடங்கு முடியும் வரை டாஸ் மாக் மதுக்கடைகளை மூடுவதற்கு உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தர விட்டது. ஆன்லைன் மூலம் மட்டுமே மது விற்க அனுமதி வழங்கியது.
இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல் முறையீடு செய்துள்ளது. அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலை யிட முடியாது என்பதால், உயர் நீதி மன்ற உத்தரவை ரத்து செய்ய வேண் டும் என்றும் மாநில எல்லைகளில் சட் டம் ஒழுங்கு பிரச்சனையை தவிர்க் கவே டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்ட தாகவும் தமிழக அரசின் மேல் முறை யீட்டு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.