tamilnadu

img

சந்தேகம் சாமிக்கண்ணு

செய்தி: பாஜக தேசியத் தலைவராக ஜே.பி. நட்டா போட்டியின்றித் தேர்வு.
ச.சா- பினாமியா இருக்குறதுக்கு போட்டி எதுக்கு..??
 

முதல்வர் எடப்பாடி பழனிசாமி: பொறுமையுடன் காத்திருந்து திறமையை நிரூபித்தால் தமிழ் அறிஞர்களுக்கு விருது கிடைக்கும்.
ச.சா- சேக்கிழார் ராமாயணம்,  அம்பேத்கருக்கு மரண தண்டனைனு உங்க திறமையப் பாத்து மக்கள் பொறுமையிழந்து இருக்காங்களே..??
 

பிரதமர் மோடி: மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் குழப்பத்தை ஏற்படுத்துகிறார்கள்.
ச.சா- ஜார்க்கண்டு, மகாராஷ்டிராவுல நிராகரிக்கப்பட்டவங்களச் சொல்றாரா..??
 

பல்கலைக்கழக மானியக்குழு: நிர்ணயிக்கப்பட்ட பெயர்களில் மட்டுமே பட்டங்களை வழங்க வேண்டும்.
ச.சா- அப்படினா பிரதமர் வாங்குன பட்டம் செல்லாததுதானா..??

;