tamilnadu

img

டாஸ்மாக் திறப்பது யாருக்காக?

அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேட்டி

மதுரை, மே 5- தமிழகத்தில் டாஸ்மாக் திறக்கும் முடிவு தமிழக அரசால் மனமுவந்து எடுக்கப்பட்ட முடிவு அல்ல அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார். 

தமிழகத்தில் டாஸ்மாக் திறக் கும் முடிவு தமிழக அரசால் மன முவந்து எடுக்கப்பட்ட முடிவு அல்ல, கள்ளச் சாராயத்தை ஒழிக்க வேண்டும் என்பதற்காகவும்,தமிழகத்தை சுற்றி உள்ள மாநிலங்களில் மதுபான கடைகள் திறந்திருப்பதால் தமி ழகத்தை சேர்ந்த குடிமகன்கள் அங்கு சென்று மது வாங்க வாய்ப்பு உள்ளதாலும் தான் தமிழகத்தில் டாஸ்மாக் திறக்கப்படுகிறது என தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரையில் செய்தியாளர்களிடம் கூறி னார். மேலும் அவர் கூறுகையில், கொரோனா வைரஸ் சமூகப் பரவலாக மாறவில்லை; கொரோனா நிவாரண நிதி மாதம் ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது; இந்த கோரிக்கையை தமிழக முதல்வர் பரி சீலிப்பார் என்றார்.

தொடர்ந்து மதுரை கரிசல்குளத்தில் ஏழை,எளிய மக்களுக்கு இலவச அரிசி, பலசரக்கு உள்ளிட்ட பொருட் களை அமைச்சர் வழங்கினார்.