tamilnadu

img

திமுக உட்கட்சி தேர்தல் அறிவிப்பு

சென்னை, பிப்.3- திமுக உட்கட்சித் தேர்தல் வருகிற 21ஆம் தேதி தொடங்கும் என அக்கட்சி தலைமை அறிவித்திருக்கிறது. இதுதொடர்பாக பொதுச் செயலாளர் க. அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், இதுவரையில், 14 உட்கட்சித் தேர்தல்கள் நடத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப் பட்டுள்ளது. வருகிற 21ஆம் தேதி முதல் உட்கட்சித் தேர்தல் தொடங்கும் என்றும், முதற்கட்டமாக, கிளைக் கழக நிர்வாகிகளுக் கான தேர்தல் நடைபெறும் என்றும் திமுக தெரி வித்துள்ளது. பின்னர் படிப்படியாக, வட்டம், ஒன்றியம், நகரம், மாநகர கழகத் தேர்தல்கள் நடைபெறும் எனக் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து, மாவட்ட நிர்வாகிகள், பொதுக்குழு - செயற்குழு உறுப்பினர்களுக் கான தேர்தல்கள் நடைபெறும் என்றும், தெரி விக்கப்பட்டுள்ளது. புதிய பொதுக்குழு கூட்டப்பட்டு தலைவர்,பொதுச்செயலாளர், பொருளாளரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெறும் என்றும் திமுக அறிவித் துள்ளது.

திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள மற்றொரு அறிக்கையில், சேலம் மேற்கு மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம், சேலம் கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக நிய மிக்கப்பட்டதால், அவருக்குப் பதிலாக, கழக தேர்தல் பணிக்குழு செயலாளராக பொறுப்பு வகித்து வந்த டி.எம்.செல்வகணபதி அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு சேலம் மேற்கு மாவட்ட கழகப் பொறுப்பாள ராக நியமிக்கப்படுகிறார். சேலம் கிழக்கு மாவட்ட கழகப் பொறுப்பா ளர் வீரபாண்டி ராஜா அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக, சேலம் மேற்கு மாவட்டச் செயலாளராக எஸ்.ஆர். சிவலிங்கம் சேலம் கிழக்கு மாவட்ட பொறுப்பா ளராக நியமிக்கப்படுகிறார். நாமக்கல் கிழக்கு மாவட்ட கழகப் பொறுப்பாளர் காந்திசெல்வன் அப்பொறுப் பில் இருந்து விடுவிக்கப்பட்டு அவருக்குப் பதிலாக கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் நாமக்  கல் கிழக்கு மாவட்டக் கழக பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார். திமுக சட்டதிட்ட விதி 31-ன்படி, வீரபாண்டி ராஜா தலைமைக் கழகத்தால் திமுக தேர்தல் பணிக்குழுச் செயலாளராக நியமிக்கப்படுகி றார் என்றும் கூறப்பட்டுள்ளது.