கருணாஸ்: ராமநாதபுரம் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று புதிதாக அரசு மருத்துவக் கல்லூரி அறிவிக்கப் பட்டுள்ளது. எனவே, மாவட்ட தலைமை மருத்துவமனையை திரு வாடணை தொகுதிக்கு மாற்ற வேண்டும்.
அமைச்சர் விஜயபாஸ்கர்: ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரிக்கான அடிக்கல் நாட்டுவிழா மார்ச் மாதம் நடைபெறும். இந்த விழாவில் முதல மைச்சர் கலந்துகொள்கிறார். மாவட்டத்திற்கு ஒரு அரசு மருத்துவக் கல்லூரி என்பதை நிறைவேற்றி வருகிறோம். மாவட்டக் தலைமை மருத்துவ மனைதான் மாவட்டக் கல்லூரி மருத்துவமனைகளாக மாற்றப்படுகிறது. எனவே, மாவட்டத் தலைமை மருத்துவமனை இடம்மாறுதல் என்ற பேச்சுக்கே இனி இடம் இல்லை. வேண்டும் என்றால், அந்த அந்த பகுதி களில் உள்ள மருத்துவமனைகளின் தரம் உயர்த்தப்படும்.