tamilnadu

img

கொரோனாவால் டாக்டர் சைமன் ஹெர்குலஸ் மரணம்

அவரது குடும்பம் விரும்பும் இடத்தில் டாக்டர் உடலை  அடக்கம் செய்ய உரிய நடவடிக்கை எடுத்திடுக!

முதல்வருக்கு மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

சென்னை, ஏப்.22- மறைந்த டாக்டர் சைமன் ஹெர்குலஸ் அவர்களின் உடலை அவரது குடும்பம் விரும்பும் இடத்தில் அடக்கம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலி யுறுத்தி தமிழக முதல்வருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கடிதம் அனுப்பியுள் ளார். முதல்வருக்கு அனுப்பியுள்ள கடிதம் வருமாறு:

கொரோனா தொற்று நோயால் பாதிக்கப் பட்டு உயிரிழந்த டாக்டர் சைமன் ஹெர்குலஸ் அவர்களின் உடல் சிலரின் எதிர்ப்பால் அவ ரது குடும்பத்தினர் விரும்பிய இடத்தில் அடக்கம் செய்ய முடியவில்லை. இதனால் அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் மிகக் கடுமையான மனஉளைச்சலுக்கு உள்ளாகி யுள்ளனர். வாழ்நாள் முழுவதும் அவர் களுக்கு இந்த மனஉளைச்சல் இருந்து கொண்டே இருக்கும்.

மேலும், அவரது மனைவி ஆனந்தி தனது கணவரின் உடலை விரும்பிய இடத்தில் அடக்கம் செய்ய அரசு உரிய உதவிகளைச் செய்ய வேண்டுமென வேண்டுகோள் விடுத்தி ருக்கிறார். இது நியாயமானது மட்டுமின்றி, கொரோனா தொற்றால் உயிரிழந்தோரை அடக்கம் செய்வது குறித்து மத்திய அரசு வகுத்துள்ள விதிகளுக்கு உட்பட்டதுமாகும். எனவே, திருமதி சைமன் அவர்களுடைய கோரிக்கையை ஏற்று, அவர் விரும்புகிற இடத்தில் அவரது கணவரின் உடலை அடக் கம் செய்வதற்கு ஆவன செய்ய வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.