இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட டி.ராஜாவுக்கு, நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவைக் குழுத் தலைவர் டி.கே.ரங்கராஜன், மக்களவை உறுப்பினர்கள் பி.ஆர்.நடராஜன், சு.வெங்கடேசன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர். டி.ராஜாவுக்கு கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் எம்.ஏ.பேபி, ஜி.ராமகிருஷ்ணன், மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்கள் தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தனர்.