சென்னை, ஏப்.8- ஊரடங்கு உத்தரவால் முடங்கி கிடக்கும் சிமெண்ட், காகித ஆலை, உரம் மற்றும் ஜவுளி உற்பத்தி உள்ளிட்ட 13 வகையான தொழிற் சாலைகளை மீண்டும் இயக்க, தமிழக அரசின் தலைமைச் செயலாளர் பிறப்பித்த உத்தரவு அடுத்த சில மணி நேரங்களில் ரத்து செய்யப்பட்டது.
தலைமை செயலாளர் சண்முகம் வெளியிட்ட அறிவிப்பில், எஃகு, சுத்திகரிப்பு ஆலைகள், சிமெண்ட், ரசாயனம், உரம், ஆயத்த ஆடைகள் தவிர்த்த ஜவுளி ஆலைகள், சர்க்கரை ஆலை, கண்ணாடி, பட்டறை தொழிற்கூடங்கள் , தோல் பதனிடும் ஆலைகள், காகிதம், டயர் மற்றும் கழிவு பொருள் சுத்திகரிப்பு நிலையம் ஆகியவை இனி இயங்கும். எனவே, பணியாற்றும் தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளும், பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை கடைபிடிக்கவும் தொழில் நிறுவனங்கள் அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில், தலைமைச் செயலாளரின் உத்தரவு அடுத்த சில மணி நேரங்களில் அதிரடியாக நீக்கப்பட்டு ஏற்கனவே விதிக்கப்பட்ட தடை தொடரும் தொடரும் என்றும் தமிழக தொழில்துறை சார்பில் மீண்டும் ஒரு சுற்றறிக்கை வெளியிடப்பட்டது.
அரசின் தலைமைச் செயலாளர் பிறப்பித்த உத்தரவை அவருக்கு கீழ் பணியாற்றும் துறைச் செயலாளர் ரத்து செய்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.