புதுதில்லி, ஜுன் 11 - உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் குறித்து அவதூறு கருத்து பரப்பிய தாக கைது செய்யப்பட்டுள்ள 3 பத்திரிகையாளர்களை விடுதலை செய்ய வேண்டும் என காங்கிரஸ் தலை வர் ராகுல்காந்தி வலியுறுத்தி யுள்ளார். இந்த கைது நட வடிக்கையை தொடர்ந்து, கடந்த ஒரு வாரமாக நாட்டி ன் கருத்துச் சுதந்திரம் குறித்து, சமூகவலைதளங் களில் பெரும் விவாதம் எழுந்துள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: என்னை பற்றி அவதுறாக செய்தி வெளியிடுவோரை சிறையில் அடைப்பதாக இருந்தால் பல நாளிதழ்கள் மற்றும் செய்தி தொலைக் காட்சிகளுக்கு ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டுவிடும். ‘உத்தரப்பிரதேச முதல்வர் முட்டாள்தனமாக செயல்படு கிறார்’, கைது செய்யப்பட்ட பத்திரிகையாளர்களை விடுவிக்க வேண்டும் என ராகுல் காந்தி தெரிவித்துள் ளார். இந்த கைது நடவடிக்கை யானது சட்டவிரோதமானது மற்றும் தன்னிச்சையானது என காங்கிரஸ் தொடர்ந்து, தெரிவித்து வந்தது.