tamilnadu

img

தனியார்மயம், மதவெறிக்கு எதிராக வலுவான போராட்டத்தை நடத்துவோம்

கம்யூனிஸ்ட் இயக்க நூற்றாண்டு விழாவில் பிரகாஷ் காரத் அழைப்பு

கொச்சி, நவ. 9 - தனியார்மயம், வகுப்புவாதத்துக்கு எதிராக வலுவான போராட்டம் நடத்தப்படும் என்று  கொச்சியில் நடைபெற்ற கம்யூனிஸ்ட் இயக்க நூற்றாண்டு விழாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் கூறினார். கொச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் இயக்க நூற்றாண்டு விழா மற்றும் ரஷ்ய புரட்சி தின  விழா நடைபெற்றது.இதில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் பங்கேற்று உரையாற்றினார். அவர்பேசியதாவது: நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்த நிலை குறித்த செய்திகள் அன்றாடம் வந்து கொண்டிருக்கின்றன. வாகனத்துறையில் மூன்றரை லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர். கட்டுமானம், துணி- நூல் உற்பத்தி என பல்வேறு துறைகளிலும் வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது. பொருளாதார மந்தநிலை நமது விவசாயத்துறை யையும் மிக மோசமான பாதிப்புக்கு உள்ளாக்கி வருகிறது. 5 ரூபாய்க்கு பிஸ்கட் வாங்கவும் பணமில்லாத நிலையில் மக்கள் உள்ளதாக பார்லே நிறுவனம் தனது உற்பத்தியை நிறுத்தும் நிலை அண்மையில் ஏற்பட்டது. ஏழைகளிடம் பணம் இல்லை. பொருளாதார மந்தம் தீவிரமாக காரணம் மத்திய அரசு பின்பற்றும் தவாறான பொருளாதார கொள்கைகளாகும்.

இதற்கு காரணம் கார்ப்பரேட் மற்றும் வெளிநாட்டு மூலதனத்தின் விருப்பங்களாகும். கார்ப்பரேட் மற்றும் வெளிநாட்டு முதலாளிகளின் பிடியில் இந்திய ஆட்சியாளர்கள் உள்ள னர். அதானி, அம்பானி போன்ற மிகச்சிறு பான்மையாக உள்ள இவர்களது விருப்பங் களுக்காக பெரும்பான்மையாக உள்ள மக்கள்  துயரங்களை அனுபவித்து வருகிறார்கள். அரசின் நிதி பற்றாக்குறையை எப்படியாவது ஈடுகட்டுவது என்கிற நிலைபாட்டின் அடிப்படை யில் பொதுத்துறை நிறுவனங்களை விடுதலை இந்தியாவில் எப்போதும் இல்லாத அளவில் தனியாரிடம் ஒப்படைத்து வருகிறார்கள். ரயில்வே, விமானம், பிபிசிஎல் போன்ற எண்ணெய் நிறு வனம் மட்டுமல்லாது, நிதித்துறையிலும்கூட தனி யாரை அனுமதிக்கிறார்கள். மிக விரைவில் குறைந்த விலையில் பொதுத்துறைகள் அனைத்தும் தனியார் கைகளுக்கு மாற உள்ளன.  இது கடுமையான மக்கள் விரோத நடவடிக்கை யாகும்.  

வகுப்புவாத நிகழ்ச்சி நிரல்

வகுப்புவாத பிரிவினைகளையும் அதிதீவிரமாக செயல்படுத்தி வருகிறது மோடி அரசு. இது தொடர்பான மூன்று நடவடிக்கைகளை அவர்கள் மேற்கொண்டுள்ளனர். முதலாவதாக ஜம்மு- காஷ்மீர் என்கிற இந்தியாவின் ஒரு மாநிலத்தை இல்லாமல் செய்தனர். இதற்கு காரணம் இந்தியாவின் 29 மாநிலங்களில் ஒரே ஒரு முஸ்லிம் பெரும்பான்மை மாநிலமாக ஜம்மு காஷ்மீர் இருந்தது. அதை அவர்களால் சகித்துக்கொள்ள முடியவில்லை. அப்படி ஒரு மாநிலம் வேண்டாம் என்பது அவர்கள் மேற்கொண்ட முக்கியமான முடிவு.

இரண்டாவது முடிவு, தேசிய குடிமக்கள் பதிவு பட்டியல் தயாரிப்பு. அண்மைக் காலத்தில் இதை நாம் அசாமில் பார்த்தோம். அடுத்த ஆண்டு  ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை நாடு முழுவதும் இதை செய்ய உள்ளனர். அதில் அனைத்து வீடு களுக்கும் சென்று ஒரு கணக்கெடுப்பு நடத்த  உள்ளனர். குடிமக்களை கண்டறிய ஒரு கணக் கெடுப்பு நடத்துவதை அசாம் அனுபவத்தோடு சேர்ந்தே பார்க்க வேண்டும். அங்கு இந்த ஒரே  நடவடிக்கை மூலம் 19 லட்சம் மக்கள் இந்திய குடிமக்கள் அல்லாதவர்களாக மாற்றப்பட்டனர். அவர்கள் வங்காள தேசத்தினர் என  அரசு கூறு கிறது. ஆனால் அவர்கள் வங்காள தேசத்தினர் அல்ல என அந்த நாடு கூறுகிறது. சுருங்க கூறி னால் அவர்கள் நாடற்ற குடிமகன்களாக மாறி யுள்ளனர். அசாமில் ஏற்பட்ட அதே நிலையை  இந்தியாவின் இதர பகுதிகளிலும் ஏற்படுத்தவே விரும்புகிறார்கள். பாஜக இவ்வாறு விரும்பு வதற்கான காரணம் இரண்டாம்தர குடிமக்கள் என்கிற ஒரு பிரிவை ஏற்படுத்த வேண்டும் என்பதாகும். அசாமில் 3 லட்சம் வாக்காளர்கள் டி  ஓட்டர் என்று அடையாளப்படுத்தப்பட்டு வாக்குரிமை மறுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இப்படி இரண்டாம்தர குடிமக்களை உருவாக்கு வது அவர்களது முஸ்லிம் விரோதச் செயல்பாடாகும்.

அரசியல் சாசன சீர்குலைவு

மூன்றாவது முடிவு, இந்திய குடிமக்கள் சட்டத்தை திருத்துவது. இதற்கான மசோதாவை அடுத்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் கொண்டுவர உள்ளனர். ஏற்கனவே, குடிமக்கள் யார் என்பதை எவ்வாறு வரையறுத்துள்ளார்கள் என்றால், சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என்று கூறப்படுவோர் தொடர்ந்து 14 ஆண்டுகள் இங்கு குடியிருந்தால் அவர்கள் விரும்பினால் குடியுரிமை பெறலாம் என்பதாகும். இதில் எந்த இடத்திலும் மத பாகுபாடு குறிப்பிடப்படவில்லை. அந்த சட்டம் அரசியல் சாசனத்தின் அடிப்படை தத்துவத்திலிருந்து உருவானதாகும். அரசியல் சட்டம் அளித்துள்ள உறுதிமொழியானது, மொழி, சாதி, மதம், நிறம் உட்பட எவற்றாலும் எந்த பாகு பாடும் அனுமதிக்கப்படாது என்பதாகும். இதில் திருத்தம் கொண்டுவரவே தற்போது நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். என்ன திருத்தம். இந்து,  பார்சி, கிறிஸ்தவ. சீக்கிய மத நம்பிக்கையாளர்கள் அருகில் உள்ள நாடுகளிலிருந்து இந்திய குடி மகன்களாக வர வரும்பினால் அவர்கள் 6 ஆண்டு காலம் இந்திய நாட்டில் வசித்தால் குடியுரிமை கோரி விண்ணப்பிக்கலாம். இதில் முஸ்லிம் களை விலக்கி வைத்துள்ளதை கவனிக்க வேண்டும். இது இந்திய அரசியல சாசனத்தை சீர் குலைக்கும் பாஜக- ஆர்எஸ்எஸ் முயற்சியாகும்.

மேற்கு வங்கத்தில் மதரீதியான அணி திரட்டலுக்கான நுட்பமான முயற்சியாகும் இது. மேற்கு வங்கமும் வங்காள தேசமும் பிரிட்டிஷ் இந்தியாவில் ஒரே மாறிலமாக இருந்தவை. அவர்கள் பேசுவது ஒரே மொழி. அவர்களது பழக்க வழக்கம் ஒன்று. மதம் மட்டுமே அவர்களை வேறுபடுத்துகிறது. சிலர் இந்துக்கள், சிலர் முஸ்லிம்கள். இந்த மதரீதியான வேறுபாட்டை பயன்படுத்தி மேற்குவங்க ஆட்சியை கைப்பற்றும் நோக்கத்துடன் இத்தகைய முயற்சி யில் பாஜக ஈடுபடுகிறது. வங்காள தேசம் உருவான போது சிலர் இங்கிருந்து அங்கும், அங்கிருந்து சிலர் இங்கும் வந்துள்ளனர் என்பது உண்மை யாகும். அதற்கு காரணம் ஏற்கனவே கூறிய அவர்களுக்கு இடையிலான ஒருமைப்பாடுகள். நாட்டின் தேசிய கீதத்தை எழுதிய ரவீந்திரநாத் தாகூர்தான் வங்காள தேசத்தின் தேசிய கீதத்தை யும் எழுதினார். இந்த ஒற்றுமைதான் வங்கத்தின் பெருமை என்பது. அதை தகர்த்து மதரீதியான பிரிவினையை ஏற்படுத்தி முஸ்லிம்களை இந்திய குடிமக்கள் அல்ல என்கிற நிலையை ஏற்படுத்துவதுதான்.

தெலுங்கானாவில் போக்குவரத்து துறையை தனியார்மயமாக்கும் அரசின் முயற்சிக்கு எதி ராக தொழிலாளர்கள் கடந்த ஒரு மாதமாக போராடி வருகிறார்கள். அங்கு தனியார் பேருந்துகளை இயக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. வரும் நாட்களில் தனியார்மயத்துக்கும், வகுப்புவாதத்துக்கும் எதிரான போராட்டத்தை வலுவாக முன்னெடுத்து செல்ல வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

 

;