tamilnadu

வாராயோ வெண்ணிலாவே... திரை மெட்டு

வாராயோ எந்தன் தோழா

வாக்களிக்க நீ வாராய்... (வாராயோ)


அன்றாட சிலிண்டர் விலையும் 

பெட்ரோல் டீசலும் உயரும்

எந்நாளும் பதற்றம் தொற்றும்

இந்நாளில் நினைவில் நிற்கும்...  

(வாராயோ)


நிதிக்குழுவும் இன்று இல்லை 

புலனாய்வுத் துறையும் தொல்லை 

ரிசர்வ் வங்கி தேர்தல் கமிஷன் 

அரசின் கைப்பாவை கண்டோம்...

(வாராயோ)


நான்கு தூண்களில் ஒன்று 

உச்ச நீதிபதிகளோ இன்று 

நீதி கேட்டு போராட்டம்

அநீதி தகர்க்க வாதோழா...(வாராயோ)


மனு அதர்ம ஆட்சி 

தினம் மக்கள் வதைபடும் காட்சி 

மனமதைச் சலவை செய்வார்

தினம் பிரிவினையை விதைப்பார்... (வாராயோ)


உலகம் சுற்றி வருவார்

நிதியை வாரித் தருவார்

கார்ப்பரேட் மேலும் கொழிக்க 

சர்க்கார் சேவகம் செய்வார்...

(வாராயோ)


ஜனநாயகத்தின் மாண்பு 

தகர்க்க நடக்கும் வம்பு

அதிபர் ஆட்சிமுறை இலக்கு

மதியால் தேர்தலில் விலக்கு...

(வாராயோ)


இனியும் நீடிக்க லாமோ

இந்த ஆட்சி தொடர்ந்திட லாமோ

இந்த தேர்தலை விட்டாலோ

எந்த பேரழிவும் நேர்ந்திடலாம்...

(வாராயோ)


தலைமை அமைச்சர் அதிகாரம் 

நிலைமை சர்வ அதிகாரம் 

கொடுமைக்கு வாக்கதி காரம்

முடிவுக்கு கொண்டுவரும் நேரம்... (வாராயோ)


பெரணமல்லூர் சேகரன்


;