tamilnadu

img

விஜய் சேதுபதியின் 'சங்கத்தமிழன்’ ஃபர்ஸ்ட்லுக் வெளியீடு

விஜய்சேதுபதியின் புதிய படம் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் வெளியாகியுள்ளது.

விஜய்சேதுபதி நடிப்பில், விஜய்சந்தர் இயக்கத்தில், விஜயா மூவீஸ் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் வெளியாகியுள்ளது.

இந்த படத்திற்கு 'சங்கத்தமிழன்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

விஜய்சேதுபதிக்கு ஜோடியாக ராஷிகண்ணா நடித்து வரும் இந்த படத்தில் ஸ்ரீமான் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். விவேக்-மெர்வின் இசையில் வேல்ராஜ் ஒளிப்பதிவில் பிரவீண் கே.எல். படத்தொகுப்ப்பில் அனல் அரசு சண்டை பயிற்சியில் இந்த படம் உருவாகி வருகிறது.