மனைவியிடம் கையும் களவுமாக சிக்கினார்
லக்னோ, மார்ச் 2- உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோ-வில், பாஜகவின் விவ சாயப் பிரிவான ‘கிசான் மோர்ச்சா’ வில் தேசிய நிர்வாக உறுப்பின ராக இருப்பவர் ஸ்ரீகாந்த் தியாகி. இவருக்கும் அனு என்ற பெண்ணிற் கும் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இதனிடையே ஸ்ரீகாந்த் தியாகி, சமூகஆர்வலர் என்று கூறப்படும் மாண்ட்வி சிங் என்ற பெண்ணுடன் நெருக்கமாக இருப்பதாக அவரது மனைவிக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் ஸ்ரீகாந்தை பின் தொடர்ந்து சென்று பார்த்தபோது, ஸ்ரீகாந்த், மாண்ட்வி சிங்குடன் தனியாக பிளாட்டில் இருந்துள்ளார். ஆவேசமடைந்த அனு, தனது கணவர் மற்றும் அவருடனிருந்த பெண்ணுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். கைகலப்பும் நடந்துள்ளது. இதையடுத்து மாண்ட்வி சிங் மீது, அனு போலீ சாரிடம் புகார் அளித்துள்ளார். போலீசாரோ, அனு, மாண்ட்வி சிங் ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர். பிரச்சனைகளுக்கு காரணமான பாஜக நிர்வாகியான ஸ்ரீகாந்த் தியாகி, எப்போதும் போல சுதந்திரமாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.