tamilnadu

மோடி இன்று பதவியேற்பு

புதுதில்லி, மே 29 -பீகாரில், பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஐக்கிய ஜனதாதளம், லோக் ஜனசக்தி ஆகிய கட்சிகள் மத்தியஅமைச்சரவையில் இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.17வது மக்களவைத் தேர்தலில்வெற்றிபெற்றுள்ள பாஜக தலைமை யிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு மே 30 வியாழனன்று இரண்டாவது முறையாக பதவியேற்கிறது. பிரதமராக நரேந்திர மோடிக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். பதவியேற்பு விழாவில் அமித்ஷா உள்ளிட்டோர் அமைச்சர் களாக பதவியேற்பார்கள் என தெரிகிறது.இந்த அமைச்சரவையில் இடம்கேட்டு அதிமுக காத்திருக்கிறது. இந்நிலையில், ஐக்கிய ஜனதாதளம் கட்சியை சேர்ந்த சந்தோஷ் குஷ்வாகா, மகாபலி சிங், ராம்நாத் தாகூர் ஆகிய 3 பேர் மத்திய அமைச்சரவையில் இடம்பெற வாய்ப்புள்ளது என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.இதேபோல், ராம்விலாஸ் பாஸ்வா னுக்கு மீண்டும் அமைச்சராக வாய்ப்புள் ளது. ராம்விலாஸ் பாஸ்வான் தேர்தலில் போட்டியிடாதபோதிலும், மாநிலங்களவை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். தன்னுடைய மகன் சிராக் பஸ் வானுக்கு அமைச்சரவையில் இடம்கிடைக்கும் என்ற தகவலை ராம்விலாஸ் பஸ்வான் மறுத்துள்ளார். அவர், அடுத்தாண்டு நடைபெறவுள்ள பீகார் சட்டப் பேரவை தேர்தலில் கவனம் செலுத்து வார் என ராம்விலாஸ் பாஸ்வான் தெரி வித்தார்.

;