விமானி உட்பட 19 பேர் பலி; 122 பேர் படுகாயம்; ஆபத்தான நிலையில் 15 பேர்
கோழிக்கோடு, ஆக.8- துபாயிலிருந்து கோழிக்கோடு வந்த விமானம் பலத்த மழையில் தரை இறங்கிய போது ஓடுபாதை யிலிருந்து விலகி விபத்துக்குள்ளான தில் விமானி, இணை விமானி உட்பட 19 பேர் உயிரிழந்தனர்.
வந்தே பாரத்தின் பகுதியாக இயக் கப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமா னம் 184 பயணிகளுடன் வெள்ளியன்று இரவு 7.40 மணியளவில் விமான நிலையத்துக்கு மேல் வான்வெளி யில் சுற்றியுள்ளது. சற்று நேரத்தில் தரை இறங்கிய உடன் பெருத்த ஒலி யுடன் விமானம் நொறுங்கியுள்ளது. இரண்டாகப் பிளந்து ஓடுபாதையில் மோதியது. மகாராஷ்டிராவைச் சேர்ந்த விமானி கேப்டன் தீபக் வசந்த், இணை விமானி அகிலேஷ் உட்பட 19 பேர் உயிரிழந்தனர். 122 பயணி கள் படுகாயமடைந்தனர். இதில் 15 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர். ஓடுபாதையிலிருந்து விலகிய விமானம் கொண்டொட்டி-குன்னம் புரம் சாலையை ஒட்டிய பாதுகாப்பு சுவரில் மோதியுள்ளது. காக்பிட் முதல் முன்வாசல் வரையிலான பகுதி தகர்ந் தது. முன்வாசல் பகுதியே இரண்டாக உடைந்தது. விமானம் தீ பிடிக்கா ததால் பெரும் துயரம் தவிர்க்கப்பட் டது. துபாய் விமான நிலையத்தில் இருந்து 10 குழந்தைகள், 46 பெண் கள், 128 ஆண்களுடன் விமானம் புறப்பட்டதாக துபாய் தூதரகத்தின் தகவல் தொடர்பு அதிகாரி நீரஜ் அகர்வால் தெரிவித்தார்.
வெள்ளியன்று பகல் 1.30-க்கு புறப்பட வேண்டிய விமானம் 45 நிமி டங்கள் கால தாமதமாக புறப்பட்டது. பார்வையாளர் விசா காலாவதியான வர்கள் பத்தாம் தேதிக்கு முன்னதாக வெளியேற வேண்டும் என கூறப்பட்ட தால் கடந்த இரண்டு நாட்களாக கேர ளத்துக்கான விமானங்களில் நெரிசல் ஏற்பட்டுள்ளது. விமானம் விபத்துக்குள்ளானதும் எழுந்த ஒலியைத் தொடர்ந்து அப் பகுதி மக்கள் ஏராளமானோர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். உட னடியாக வந்த ஆம்புலன்ஸ்களில் காயமடைந்தவர்கள் கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி, மிம்ஸ், பேபி நினைவு மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். விமான விபத்தில் காயமடைந்தோருக்கு அவ சர சிகிச்சை அளிப்பதற்கான வசதிகள் செய்யப்பட்டதாக கேரள சுகாதார அமைச்சர் கே.கே.சைலஜா கூறி னார். அமைச்சரின் உத்தரவைத் தொடர்ந்து கோழிக்கோடு, மலப்புறம் மாவட்டங்களின் மருத்துவ அதிகாரி கள் சம்பவ இடத்துக்கு வந்தனர். இரண்டு மாவட்டங்களிலிருந்தும் 108 ஆம்புலன்ஸ்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு அனுப்பியதாக வும் அமைச்சர் கூறினார்.
நிவாரணம்
விமான விபத்து குறித்து பிரதமர் நரேந்திர மோடி, கேரள முதல்வர் பின ராயி விஜயனிடம் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, தேவையான உதவிகளை மத்திய அரசு செய்யும் என உறுதி அளித்தார். இந்நிலையில் கோழிக்கோடு விமான நிலையத் துக்கு வந்த விமானத்துறை அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி, வெளியுறவுத்துறை துணை அமைச்சர் வி.முரளீதரன் ஆகி யோர் விமான நிலையத்தை பார்வை யிட்ட பின் செய்தியாளர்களை சந்தித் தனர். உயிரிழந்தோர் குடும்பங்க ளுக்கு தலா ரூ.10 லட்சமும், படுகாயம் அடைந்தோருக்கு ரூ.2 லட்சம், சாதா ரண காயமடைந்தோருக்கு ரூ.50 ஆயி ரம் நிவாரணமாக வழங்கப்படும் என தெரிவித்தனர். கரிப்பூர் (கோழிக் கோடு) விமான நிலையத்தின் குறை பாடுகள் குறித்து ஏற்கனவே நட வடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
ஆளுநரும், முதல்வரும் வருகை
சனியன்று காலை 12 மணியள வில் கேரள ஆளுநர் ஆரிப் முகம்மது கானும், முதல்வர் பினராயி விஜய னும் கோழிக்கோடு மருத்துவ மனைக்கு வந்து சிகிச்சை பெறுவோ ருக்கு ஆறுதல் கூறினர். பின்னர் உயர் மட்ட ஆலோசனைக் கூட்டத்தைத் தொடர்ந்து நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் இருவரும் பேசினர். அப் போது, விமான விபத்தில் காயமடைந் தோருக்கான சிகிச்சை செலவை மாநில அரசு ஏற்கும் என்றார். விமான விபத்தின் போது பொதுமக்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டது முன்மாதியா னது என்றார். சபாநாயகர் பி.ஸ்ரீராம கிருஷ்ணன், அமைச்சர்கள் கே.கே.சைலஜா, முகைதீன் ஆகியோர் முதல் வருடன் இருந்தனர்.