tamilnadu

img

திரைக்கலைஞர் ஜோதிகாவை இழிவாகப் பேசும் வெறியர்களுக்கு மாதர் சங்கம் கண்டனம்

சென்னை,ஏப்.25- திரைக்கலைஞர் ஜோதிகா குறித்து சமூக வலைத்தளங்களில் இழிவாகப் பதிவிடும் காவிக் கும்பல்களுக்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா, மாநிலப் பொதுச்செயலாளர் பி.சுகந்தி ஆகி யோர் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடந்த விருது வழங்கும் விழாவில், ராட்சசி படத்தில் நடித்த திரைக் கலைஞர் ஜோதிகாவிற்கு 2019ஆம் ஆண்டிற்கான சிறந்த பெண் நடிகர் விருது வழங்கப்பட்டது. அவ்விழா வில் தனக்கு வழங்கப்பட்ட விருதை பெற்றுக் கொண்டு பேசிய திரைக் கலைஞர் ஜோதிகா, தஞ்சையில் ஒரு படப்பிடிப்புக்கு சென்றபோது தான் பார்த்த சில விஷயங்களை பதிவு செய்துள்ளார். பிரகதீஸ்வரர் கோவில் மிக அழகாக உள்ளது. உதய்பூர் பேலஸ் போல உள்ளது. படப்பிடிப்புக்காக தஞ்சை அரசு மருத்துவ மனைக்குச் சென்றபோது அது அடிப்படை வசதியற்று, பராமரிப்பற்று இருந்தது என்றும், நாம் கோவில்களை பராமரிக்க அதிகம் செலவு செய்கிறோம் பெயின்ட் பண்ணுகிறோம், கோ வில் உண்டியல்களில் பணம் போடு கிறோம். அதேபோல அரசு மருத்துவ மனைகளுக்கும் கொடுங்கள். அரசு பள்ளிகளை மேம்படுத்துவதற்கும் கொடுங்கள் என்ற வேண்டுகோளை முன்வைத்தார். தன் கருத்தை சொல்வதற்கு ஜோதிகாவிற்கு உரிமை உண்டு. ஜோதிகாவின் இக் கருத்தை ஜன நாயக மாதர் சங்கம் வரவேற்கிறது.

இன்று அரசுபள்ளிகள் போது மான கட்டமைப்பு வசதி களற்றுக் கிடக்கின்றன. பல பள்ளிகள் மூடப் படும் நிலையில் உள்ளன. மேலும் அரசு மருத்துவமனைகளில் போது மான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லாமலும், உயிர் காக்கும் மருந்துகள் இல்லா மலும் ஏழை எளிய மக்கள் தவித்து வருகின்றனர்.

அவர் பேசிய இந்த வீடியோவை ஒவ்வொருவரும் தனக்கு சாதக மாக சில பகுதியை மட்டும் எடுத்து பதிவிட்டு இந்து கோவிலை ஜோதிகா இழிவு படுத்திவிட்டதாகவும், ஜோதிகா இந்து கோவில்களுக்கு நன்கொடை கொடுக்க வேண்டாம் என்று சொன்னதாகவும் பொய்யான தகவலை முகநூலில் பரப்பி வருகின் றனர். மேலும் அவர் வட மாநிலத்தைச் சேர்ந்தவர் என்றும் அங்கிருந்து தமிழகத்திற்கு பிழைப்புக்கு வந்தவர் என்றும், இஸ்லாமிய சமூகத்தை சார்ந் தவர் என்றும் முகநூலில் பதிவிட்டு மிகவும் இழிவான அரசியலை சங்கிகள் நடத்தி வருகிறார்கள்.

ஒரு பெண் என்பதாலேயே ஆபாச மான சொற்களையும், பாலியல் நிந்த னைச் சொற்களை பயனபடுத்தி விமர் சித்து வருகின்றனர். சிலர் ஜோதிகா விற்கு அஞ்சலி செலுத்தி போஸ்டர் போட்டுள்ளனர். சங்கிகளின் இத்தகைய செயல் அநாகரீகமானது. வன்மையாக கண்டிக்கத்தக்கது. 

மலிவான அரசியல்

இந்தியா முழுவதிலும் கொரோனா பாதிப்பால் மக்கள் அல்லல்பட்டு உயிருக்குப் போரா டிக் கொண்டிருக்கும் இவ்வேளை யில், அரசு மக்களின் வாழ்வாதாரத் தைப் பற்றி கண்டு கொள்ளாமல் கைதட்டச் சொல்லியும், வீட்டில் விளக் கேற்றச் சொல்லியும் மக்களை திசை திருப்பி வருவதைப் போலவே, சங்கி களும் எப்போதோ ஜோதிகா பேசிய வீடியோவை தேடி எடுத்து இது போன்ற மலிவான அரசியல் நடத்தி வருவது மக்களின் பிரச்சனையை திசை திருப்பும் நோக்கமின்றி வேறென்னவாக இருக்க முடியும்.

2013ஆம் ஆண்டு பிரதமர் மோடி அவர்கள் இந்தியாவில் கோவில்கள் அதிகம் உள்ளன. எனவே இனிமேல் கோவில்களை அல்ல, கழிவறை களை கட்டுங்கள் என்று சொன்னார். ஜோதிகாவின் அதே வார்த்தையைத் தான் அன்று மோடி பேசியிருக் கின்றார். இருவர் பேசியிருப்பதும் ஒரே கருத்துதான்.

கைது செய்க!

இங்கு என்ன விஷயம் பேசி னார்கள் என்பது முக்கியமல்ல. யார் பேசினார்கள் என்பதே சங்கி களுக்கு முக்கியம். அன்று மோடியை கொண்டாடிய சங்கிகள் இன்று ஜோதிகாவை இழிவுபடுத்துகின்ற னர். இதிலிருந்தே இவர்கள் உண்மை யிலேயே இந்துக்கள் மீதும், இந்து கோவில்கள் மீதும் அக்கறை உள்ள வர்களா என தெரிந்து கொள்ள முடியும்.

இதே கருத்தை ஆண் பேசியி ருந்தால் ஆன்ட்டி இந்தியன் என்றிருப் பார்கள். பெண்ணாக இருப்பதால் பாலியல் நிந்தனைச் சொற்களா லும், நடத்தை குறித்தும் இழிவான வார்த்தைகளால் பேசியும், முக நூலில் பதிவிட்டும் வருகின்றனர். 

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் ஜோதிகாவின் கருத்துச் சுதந்திரம் பறிபோவதை ஒருபோதும் அனுமதிக்காது. கருத்துச் சுதந்திரத்தை பாதுகாக்கும் போராட்டத்தில் என்றென்றும் களத்தில் நிற்கும். ஜோதிகா குறித்து இழிவாக முகநூலில் பதிவிட்ட சங்கிகள் மீது தமிழக காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

 

;