புதுச்சேரி, ஜூலை 6- புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசனின் ஒரே மகனும், முதுபெரும் தமிழறிஞருமான மன்னர் மன்னன் என்கிற கோபதி, திங்களன்று பிற்பகலில் புதுச்சேரியில் கால மானார். அவருக்கு வயது 92. இந்தத் தகவலை மன்னன் மகனும், பாரதிதாசன் அறக்கட்டளைத் தலைவருமான கவிஞர் கோ.பாரதி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி வானொலி நிலையத்தில் ஆசிரிய ராகப் பணியாற்றிய மன்னர் மன்னன் ஏறத்தாழ 50 நூல்கள் எழுதியுள்ளார். பல அமைப்புகளில் முக்கிய பொறுப்பில் இருந்தார். புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் தலைவராகப் பல ஆண்டுகள் பொறுப்பில் இருந்து அதற்கு சொந்தக் கட்டடம் கட்டித் தந்தவர். தமிழக அரசின் திரு.வி.க விருது, கலை மாமணி விருது, புதுச்சேரி அரசின் தமிழ்மாமணி, கலைமாமணி விருது உள்ளிட்ட பல விருதுகள் பெற்றுள்ளார். மிகச் சிறந்த பேச்சாளர், எழுத்தா ளர், கவிஞர். பாரதிதாசனின் வாழ்க்கை வரலாற்றை முதன் முதலில் எழுதி வெளியிட்டவர்.