மேகாலயா, ஏப்.16- மேகாலயா மாநிலத்தில் கொரானோவால் பாதிக்கப்பட்ட 69 வயது மதிக்கத்தக்க மருத்துவர் புதன்கிழமையன்று அதிகாலை 2:45 மணியளவில் காலமானார். மருத்துவர் மூச்சுத் திணறலால் உயிரிழந்ததாக மேகாலயா சுகாதா ரத்துறை ஆணையாளரும் செயலாளருமான சம்பத்குமார் தெரிவித்துள்ளார். மருத்துவர் மறைவிற்கு அம்மாநில முதல்வர் கான்ராட் சங்கா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.